Memory Lane - 108
ஆசியான் உச்சநிலை மாநாடு.
நாளை 27/10 தொடங்கவிருக்கும் 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் உபசரனை நாடு மலேசியா. அதனை முன்னிட்டு உலகத் தலைவர்கள் வருகை ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. இன்று, Donald Trump வருவதாக ஏற்பாடு.
இந்தத் தலைவர்கள் தங்கியிருக்கும் 'Intercontinental Hotel' ஒட்டியிருக்கும் 'Ampang Park' வளாகத்தில் சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு Donald Trump-ற்கு எதிராக, அவனுடைய இஸ்ரேல் ஆதரவு கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதாக ஏற்பாடு. நான் சார்ந்திருக்கும் 'PSM' (Party Socialist Malaysia) அதில் இணைந்து தோழர்களின் பங்களிப்பைக் கோரியிருந்தது. ஆனால், போலீஸ் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நற்பெயரைக் காரணம் காட்டி 'Ampang Park' வளாகத்திற்கு அனுமதி தர மறுத்திருக்கிறது. மாற்றாக 'Merdeka' சதுக்கத்தில் ஒன்றுகூட அனுமதித்திருக்கிறது.
ஒரு காலத்தில் 'Reformasi' (Reformation) என்று கூச்சல் போட்டு, சாலைப் போராட்டத்தை நடத்தியே ஆட்சிக்கு வந்த கட்சி நடத்தும் அரசாங்கம் இது.
ஆனால், இன்று ஓர் இன அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு அனுமதியில்லை. அரசின் எல்லா அதிகார துஷ்பிரயோகத்தையும் செய்து, பொது போக்குவரத்து வசதிகளை முடக்கி வைத்திருக்கிறது.
நான், என் வீட்டருகே இருக்கும் 'MRT' டிரெய்ன் ஏறி, மெர்டேக்கா சதுக்கம் சென்று, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதென்று தீர்மானம். 'Equine Park MRT Station'-க்கு சென்றேன். அடுத்த டிரெய்னுக்கான தகவலை மின் பலகையில் தேடினேன். அது கொடுத்த தகவல் ஒன்றுமே புரியவில்லை!. பணியிலிருந்த பெண்ணிடம் விளக்கம் கேட்டேன். அவளுக்கு ஆங்கிலம் தெரியல்லை!. அவன் சொன்ன மலாய் மொழியில் எனக்குப் புரிந்ததெல்லாம், 'டிரெய்ன் புறப்படும் நேரமும் நிச்சயமில்லை!.. திரும்பி வரும் நேரமும் நிச்சயமில்லை..'
HIDUP REFORMASI


Comments
Post a Comment