Zamri Kalimuthu -வும் Firdaus Wong-ம்
ஆமாம், இந்த Zamri Kalimuthu -வும் Firdaus Wong-ம் நேற்றைய மழையில் முளைத்த காளான்கள். 60 வருடங்களாக நாட்டை ஆண்ட கூட்டணியில் ம இ கா அங்கம் வகித்த காலங்களில் இத்தகைய தீவிரவாதிகள் இப்போதுபோல் அப்போது வாலாட்டியிருந்தால் இவர்களின் வாலை ஒட்ட வெட்டியிருக்கமாட்டார்களா ஒட்ட?
ம இ கா ஆட்சி காலத்தில் யாருக்கு இந்தியர்களை/இந்து மதத்தை கிண்டல் செய்து பேச தைரியம் இருந்தது.
Ahmad Zahid Hamidi இந்தியர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று விமர்சனம் வைத்தபோது ' வாருங்க உங்களுக்கு சவப்பெட்டிகள் இனாமாகத் தருகிறேன் என்று சொன்னபோது நமது இன தலைவர்கள் கொந்தளித்து கூட்டணியிலிருந்தே விலகுவதாக கொந்தளிக்கவில்லையா.
இந்த கட்சிகள் எல்லாவற்றிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒரே பாடம்தான். இவர்கள் எல்லோருமே சுயநலமிகள்தாம். ஆன்வர் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டான். அதிலும் இனவாத கட்சிகளுக்கு எந்தக் காலத்திலும் ஆதரவு கொடுக்கவே கூடாது. கொடுத்தால், ரெஸ்டாரண்டு, கல்யாண மண்டபம் கட்டி காசு பார்ப்பார்கள். நாம், காலத்திற்கும் B40-ஆக இருந்துக்கொண்டு 100 வெள்ளி மானியத்தை வாங்கிக்கொண்டு நமது பொருளாதார தேவையைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான். 

Comments
Post a Comment