Vasectomy
Life is Funny - 3 (வயது வந்தவர்களுக்கு மட்டும் )
செய்தி : 2025-ல் குழந்தை பாக்கியம் மிகவும் பிரகாசமாக இருப்பதாக ஜோதிடர்கள் கணிப்பு
பாத்திரங்கள் : டாக்டர் & மீ
டாக்டர் : ம்… குட் மார்னிங் யங் மேன். வாட் கன் ஐ டூ பார் யு?
மீ : 2025 -ல குழந்த பாக்கியமெல்லாம் ரொம்ப பிரகாசமா இருக்குறதா ஜோசியகாரங்க சொல்றாங்க டாக்டர். நமக்கு ஏற்கெனவே நாலு புள்ளிங்க ஆச்சி. அதால, நான் ‘வாசெக்டமி’ செஞ்ஜிக்கிலாம்னு இருக்கன் டாக்டர்.
டாக்டர் : (மருத்துவ கார்ட்டில் சகாவின் வயதை பார்க்கிறார். அந்த டாக்டர், ‘Professional to the core’) ஓ, பேஷா செஞ்சிலாமே.. ஆனா, காசு கொஞ்சம் செலவாவும். தெரியுந்தானே?..
மீ : தெரியும் டாக்டர். ஒரு கொழந்தைய பெத்து, வளத்து, கைப்பேசியெல்லாம் வாங்கி குடுத்து பெரியவங்களா ஆக்கற செலவ விட அது, கொறவாதான இருக்கும். அதான், செலவு எவ்ளோ ஆவுன்னு தெரிஞ்ஜிஜா பரவால்ல..
டாக்டர் : (தனது கணினியில் ஒரு தோராயக் கணிப்பைப் போட்டு, பில்லை கொடுத்தார்)
மீ : (பில்லில் காணப்பட்ட செலவுகளை உண்ணிப்பாக பார்த்துவிட்டு சொன்னார்) டாக்டர், முடிஞ்ச அந்த ‘Local anesthetic’ சார்ஜ்ஜை எடுத்துடிங்கன்னா நல்லது டாக்டர். செலவு கொஞ்சம் கொறயும்.
டாக்டர் : (மிகுந்த குழப்பத்துடன்) மை குட்னெஸ்!.. எப்படி?.. உங்களால ஆப்பரேஷன் பெயின்ன பொறுத்துக்க முடியுமா? ரொம்ப வலிக்குமே?..
மீ : ஒரு ஹம்பில் ரிகுவஸ்ட் டாக்டர். ஆப்ரேஷன பகல்ல வெச்சிக்கிட்டிங்கன்னா (Local anesthetic) போடற அவசியமே இருக்காதே. அதான்……
டாக்டர் : (கட்டுப்படுத்த முடியாத சிரிப்பில் வெடித்து) சரி… சரி.. அப்படியே ஆவுட்டும். நேர்ஸ், இவர ஒடனே ஆப்பரேஷன் தீயேட்ருக்கு கூட்டிட்டு போங்க..

Comments
Post a Comment