One man's bread, another man's poison

 


பேசாப் பொருள் பேசினேன் – 29

One man's bread, another man's poison
மார்ச் 16, 2025
மத்தியானம் மணி 3.45
அந்த இளைஞன் அந்தப் பேரங்க்காடியில் (Mall) இருந்த உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அரேபிய ‘ஜுபா’ பாணி உடையணிந்த ஒரு மூத்த மலாய் குடிமகன் (Senior Citizen) இளைஞனை அணுகி, ‘நீ ஒரு சீனனா?’ என்று கேட்கிறான். இளைஞன், ‘ஆமாம்’ என்கிறான். அப்துல் ரசாக் (அந்த மலாய்க்காரனின் பெயர்) இளைஞனின் அடையாளக்கார்ட்டைக் கேட்கிறான்.
அவன், ‘உரிமையுள்ளவர்களைத் தவிர மற்றவர்களிடம் அடையாளக்கார்ட்டைக் காட்டவேண்டிய அவசியமில்லை’யென்று சொன்னதும், ‘நீ ஒரு முஸ்லீமா?’ என்று கேட்கிறான் அப்துல் ரசாக். இளைஞன் ‘இல்லை’யென்று சொன்னதும், அப்துல் ரசாக், ‘நீ முஸ்லீமாக இல்லாவிட்டாலும் நோன்பு மாதத்தில் பொது இடத்தில் சாப்பிடக்கூடாது ‘என்று கண்டித்து, இளைஞனின் கன்னத்தில் சரமாரியாக அறைகின்றான். உடனே, அருகிலிருந்த ரசாக்கின் மகன் தந்தையின் அநாகரிக செயலிற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறான்.
இளைஞன், ‘மகன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாலும் தந்தைச் செய்தது அத்துமீறல்’ என்று சொல்லி, தான் அறையப்பட்ட காணோளியை வைரல் செய்ததோடு போலீசிலும் புகார் கொடுக்கிறான்.
வழக்கு இன்று ஜோகூர் பாரு மஜிஸ்டிரேட் நீதிமன்றத்திற்கு வருகிறது. குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி, சார்ஜ் சீட்டில் சொல்லப்பட்டிருந்த தகவல்களோடு தான் முரண்படுவதாக கூறுகிறான்.
மஜிஸ்டிரேட் நீதிபதி : உன்னுடைய நிபந்தனைக்குட்பட்ட குற்ற ஒப்புதலை ஏற்றுக்கொள்ள முடியாது. நீ ஒரு வழக்குரைஞரை வைத்துக்கொள். (The court cannot accept your conditional guilty plea such as “I do not admit the facts of the case exactly, but I want to plead guilty because I have a responsibility”. That is a conditional guilty plea, the court cannot accept such a guilty plea. I will set a mention date for you to appoint a lawyer).
அப்போது, (in a sudden turn of events) திடீரென்று புரொசிகியூஷன் தரப்பு, ‘இந்த வழக்கை அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ்சிற்கு மாற்றச் சொல்லி உத்தரவு வந்திருப்பதாக நீதிமன்றத்தில் சொல்கிறார்.
தொடர்ந்து மற்றொரு நாளில் அவன் மேல் வழக்கு தொடுக்கப்படும் என்றும் இப்போதைக்கு discharge not amounting to acquittal (DNAA) கீழ் விடுவிக்கப்படுகிறான் என்று DPP கூறுகிறார்.
பின்னாளில் குற்றம் நிரூபனமானால் பினல் கோட் செக்ஷன் 323 படி ஒரு வருட சிறைத் தண்டனையும், RM2000 ரிங்கிட் அபராதமும் அவனுக்குக் காத்திருக்கிறது.
60-களில் இருந்த மலாய்க்காரர்களின் பாரம்பரிய உடை கலாச்சாரமான ‘பாஜூ மலாயு’ இப்போது அரேபிய ‘ஜுபா’-வாக மாறிக்கொண்டிருக்கிறது.
இஸ்லாமிய தீவிரவாதம் விருப்பத்திற்குரியதாய் இருக்கிறது. ஜாகீர் நாய்க், ஜம்ரி வினோத் காளிமுத்து போன்ற தீவிரவாதிகள் அவர்களின் மத போதகர்கள்.
மேற்காணும் சம்பவத்தின் பின்னணியில் கீழ்காணும் சம்பத்தையும் இணைத்துப் புரிந்துக்கொள்ளலாம்.
கோலாலம்பூர் மாநகர மையத்தில் 130 வருடங்கள் பழமையான ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் ஒன்றுள்ளது. அதாவது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தே 68 ஆண்டுகள் ஆகின்றன. ஆலயமோ 130 வருடகள் பழமை வாய்ந்தது.
அந்த ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு மசூதி கட்ட மாநகராட்சி மன்றம் ஒப்புதல் அளித்து மிக விரைவில் அந்த அலயம் இடிக்கப்படவுள்ளது.
கூடிய விரைவில் அந்த மசூதிக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் ஆன்வார் இப்ராஹிம் வரவுள்ளார். மாநகரில் அந்த மசூதி கட்டப்பட வேறு ஒரு துண்டு நிலமே இல்லை போலும்.
நளை இது தொடர்பாக முன்னாள் பார்ப் கவுன்சில் பிரசிடென்ட் திருமதி அம்பிகா ஸ்ரீனிவாசனும், Lawyers For Liberty இயக்கமும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர்.
எந்த நாட்டிலும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எந்த மதமும், அது இந்து மதமாக, இஸ்லாமிய மதமாக, கிருஸ்துவ மதமாக, புத்த மதமாக, யூத மதமாக என்று எந்த மதமாகவும் இருக்கலாம்!. அதன் பொது குணம் சிறுபான்மையினரை அடக்கியாள்வது. அவர்களின் அடையாளங்களை அழிப்பது.
சரி, ஒரே மதம் என்று சொல்லி ஒற்றுமையாக இருப்பார்களா? அதற்குள் சில உட்பிரிவுகள் வேண்டும்.
மதம் பிடித்த மானுடம்.
- அராஜகம் செய்யும் காட்சி
- மலாய்க்காரர்களின் பாரம்பரிய உடை
- அநியாயம் செய்பவனின் அரேபிய உடைத் தோற்றம்.

Comments

Popular Posts