K. L. எனும் கோலாலம்பூர்

 




Memory Lane – 39
K. L. எனும் கோலாலம்பூர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினரால் சுருக்கமாக K. L. என்பதின் விரிவாக்கம் KUALA LUMPUR ஆகும். இது ஒரு மலாய் மொழி வார்த்தை. KUALA என்றால் முகத்துவாரம் அல்லது சங்கமம். LUMPUR என்றால் சேறு அல்லது சேறு நிறைந்தது. ஆக, சேறு நிறைந்த முகத்துவாரம் என்பது அதன் அர்த்தமாகிறது. கோம்பாக் ஆறு கிள்ளான் ஆற்றுடன் சங்கமிக்கும் மையம் இந்த முகத்துவாரம்.
இந்த முகத்துவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் மசூதியின் பெயர் Masjid Jamek. இது, Arthur Benison Hubback என்ற கட்டிடக்கலை வல்லுரால் வடிவமைக்கப்பட்டு 1909 கட்டப்பட்டது. மலேசியாவில் உள்ள மிகப் பழமையான மசூதிகளில் ஒன்று. கிளந்தான் மாகாணத்தில் உள்ள தும்பாட் மாவட்டத்தைச் சேர்ந்த Kampung Laut எனும் இடத்திலுள்ள Masjid Kampung Laut மசூதி நாட்டிலேயே மிகப் பழமையான மசூதியாக கருதப்படுகிறது. இது, 1676 கட்டப்பட்டதாக வரலாறு.
கோலாலம்பூர் மாநகரம் 94 சதுர மைல்களைக் கொண்டது. அதன் ஜனத் தொகை 1,982,112 மில்லியன். அதில் 45.9% மலாய்க்காரர்கள், 43.2% சீனர்கள், 10.3% இந்தியர்கள். 0.5% பிற இனத்தவர்கள்.
நாட்டின் தலைநகரமாகவும் இருக்கும் கோலாலம்பூருக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துரையினர்க்கு மத்தியில் ஒரு சிறப்பு பெயர் இருக்கிறது. அது, City Of Malls. வணிக வளாகங்களின் நகரம்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 50 மால்களில் கோலாலம்பூரில் மட்டுமே 25 மால்கள் இருக்கின்றன. கிள்ளான் பள்ளத்தாக்கின் மொத்த பரப்பளவு 2005.69 சதுர மைல்கள். அதில், 94 சதுர மைல்களை மட்டுமே கொண்ட கோலாலம்பூரில் 25 மால்கள்!. ஆமாம் 25 வணிக வளாகங்கள் இருக்கின்றன.
வாரத்திற்கு ஒரு வளாகம் என்று போய் வந்தாலும் அவற்றைப் பார்த்துவர 6 மாதங்கள் வேண்டும். யாருமே வெறுமனே பார்த்துவர மட்டுமே அவ்விடங்களுக்கு போவதில்லை. நிச்சயமாக ஏதாவது வாங்கிக்கொண்டே வருவார்கள். அப்படியாயின் அவர்கள் ஒரு மாதத்திற்கு இத்தகைய செலவிற்கென்று ஒதுக்கும் தொகை எவ்வளவாக இருக்கும்?
RinggirPlus என்ற ‘Financial services Wesite’ -டின் 2022-ம் வருட ஆய்வில் தெரிய வந்த தகவல். மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 70% ஒரு மாதத்திற்கு ரிங்கிட் 500.00 வெள்ளிக்கும் குறைவான சேமிப்போ அல்லது ஒரு வெள்ளிகூட சேமிப்பதே இல்லையென்றோ தெரிய வந்துள்ளது. இன்னும் ஓர் அதிர்ச்சித் தகவல், 15.21 மில்லியன் சந்தாரர்களைக் கொண்ட Employee Provident Fund-ல் 3.6 மில்லியன் சந்தாதரர்கள் தமது ஓய்வூதிய கணக்கில் மிச்சம் வைத்திருக்கும் தொகை வெள்ளி 1000.00 மட்டுமே.
சில வருடங்களுக்கு முன்னர், பேரனுடன் வீட்டிற்கு அருகில் உள்ள ‘IOI City Mall’ -ல் இருந்த விளையாட்டு ரயிலில் ஒரு மலாய் சகோதரரை சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியைத் தந்தது. அவர் தன் குடும்பத்துடன் (மனைவி, இரண்டு பிள்ளைகள்) காலை 11.00 மணிக்கு அந்த மாலுக்கு வந்ததிலிருந்து சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ‘Window Shopping’ என்பது அதன் கௌரவப் பெயர். நான் அவரைச் சந்தித்தபோது இரவு மணி 8.00 அவரின் பிள்ளைகள் எத்தனை மணிக்கு புத்தகங்கள் படிப்பார்கள்? அந்த பழக்கமெல்லாம் அவர்களுக்கு இருக்குமா?
ஐயோ, இந்த பிள்ளைகளெல்லாம் பெரியவர்களாகி இவர்களுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும்போது இப்போது இருக்கும் இந்த 25 மால்கள்கூட போதாமல் போய் விடுமே?
ஆடம்பரத்தின் அதிநவீன கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் உள்வாங்கி தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் இந்த வளாகங்களின் வணிக போட்டியில் பாவம், விபரம் தெரியாத, தெரிந்துக்கொள்ள விரும்பாத, Discipline இல்லாத அப்பாவி மக்கள் தம்மைப் பலிகொடுப்பதோடு, அடுத்த தலைமுறையையும் காவு கொடுப்பது, ஒரு சமூக சீர்கேடு.
- கோம்பாக் ஆறும் கிள்ளான் ஆறும் சங்கமிக்கும் இடம்
- பின்னணியில் Masjidரி Jamek மசூதி
- IOI City Mall
- Suki - Ya ஜப்பானிய உணவை உண்ண வரிசைப் பிடித்து காத்திருக்கும் மக்கள் கூட்டம். 'Eat all you can' சவால்!
- சிங்க நடனத்தில் அதிர்ஸ்டத்தை வேண்டி நிற்கும் ஒரு கம்பியூட்டர் கடை
- Suki - Ya கடையில் நுழைய நீண்டுக்கொண்டிருக்கும் மக்கள்.
- பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம்
- இரட்டை கோபுரம் உள்ளே (இரண்டு படங்கள்)
- வணிக போட்டியில் பங்கெடுத்திருக்கும்
1. Berjaya Time Square (2)
2. Low Yat Plaza. முழுக்க கம்பியூட்டர் பொருட்களுக்கென்றே இருக்கும் மால்.
3. Pavillion - நஜிப் மற்றும் மனைவி ரோஸ்மா தமது ஆடம்பர கொள்ளையை பதுக்கிவைத்திருந்த ஒரு அபார்ட்மென்ட் இருக்கும் மால்
4. புதியதாக திறக்கப்பட விருக்கும் இன்னொரு Pavillion D'Sara mall.
5. 1MDB ஊழலில் சம்பந்தப்பட்ட TRX கட்டிடம்
6. 118 மாடிகளைக் கொண்ட அதிநவீன மெர்டெகா மால்



Comments

Popular Posts