I do not want somebody to come and urinate on my grave. - Tan Sri Ani Aropi

 


Memory Lane - 10

நான் 'Baby Boomer' தலைமுறையைச் சேர்ந்தவன். தேசிய மொழியான மலாய் ஒரு பாடமாகவும், மற்ற எல்லாப் பாடங்களுமே ஆங்கிலத்தின் வழியே போதிக்கப்பட்ட காலம் அது. அப்போது கல்வியின் நோக்கம் மாணவர்களுக்கு அறிவைப் புகட்டுவதாக இருந்தது. அந்த கொள்கையின் வழி கல்வியைப் பெற்று மிகச் சிறந்த அரசாங்க நிர்வாகிகளாக Tan Sri Ani Arope, (Fulbright scholarship recipient. தேசிய மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த போது, Dr. Mahathir Mohammad -வின் IPP -Independent Power Plant- என்ற பகற்கொள்ளையைப் பொறுக்க முடியாமல் -அது சட்டத்திற்கு உட்பட்டதே ஆனாலும் அறம் அற்ற செயல் என்பதற்காகவே - நிமிர்ந்த தலையுடன் பதவியைத் துறந்தவர். அந்தச் சம்பவத்தை நினைவு கூறுகையில் அவர் இப்படி சொன்னார். 'I do not want somebody to come and urinate on my grave. In the Malay culture, that is about the worst insult they can do to a man. இத்தகைய அவமானத்திற்கு முற்றும் அருகதை உள்ள இரண்டு கயவர்கள், Dr. Mahathir & Najib Tun Razak. )
மலேசியாவின் தலைமை நீதிபதி, Mohammed Suffian. (ஒரு காலத்தில் இவர் New Delhi All-India Radio and BBC in London -ல் அரசியல் பார்வையாளராக இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்தவர்) நீதித்துறையின் நேர்மைக்கும்; சுதத்திரத்திற்கும் அயராது போரிட்டவர். மறுபடியும் Dr. Mahathir தனது தன்னிச்சையான நிர்வாக ஊழலுக்கு சுதந்திரமான நீதித்துறை மிகவும் தடங்கலாக இருப்பதை உணர்ந்து 1988-ல் 6-வது Lord President-ஆக இருந்த Tun Salleh Abbas உடன், சுதந்திரச் சிந்தனை மிக்க இன்னும் இரண்டு நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்து, நீதித்துறையை தனது அரசியல் சூதாட்டத்திற்கு சாதகமாக்கி, நீதிபரிபாலனத்தையே கேளிக்கூத்தாக்கினார். அதன் ஆரம்பமாக தனது ‘Hand-Picked’ துணைப்பிரதமரான Anwar Ibrahim-ன் மேலேயே ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டை சுமத்தி, சிறையில் அடைக்கிறார். (அந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி மிக்க ஒரு ‘Despicable Person’ டாக்டர் மகாதீர்.) அப்போது, தலைமை நீதிபதி துன் சுஃபியான் மகாதீரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘PAPA DOC’ என்று Haiti Dictator-உடன் மிகவும் ‘Cryptic-ஆக ஒப்பிட்டார். (Doc என்பது டாக்டரை குறிக்கும் சொல். மகாதிர் ஒரு டாக்டர்) அந்தக் கேளிக்கூத்தின் தாக்கத்திலிருந்து நீதித்துறை மீளமுடியாமல் இன்று வரை தள்ளாடுகிறது. இன்னும், Bakri Musa என்ற கல்விமான், Mohdmad Tajuddin Rasdi என்ற விரிவுரையாளர் போன்ற சிறந்த சிந்தனையாளர்களையெல்லாம் அந்தக் கல்வியே உருவாக்கியது.
1970-ல் மகாதிர் ஆட்சிக்கு வந்து, கல்வியில் சமயத்தைப் புகுத்துகிறார். சுதந்திரமான சிந்தனை எப்போதுமே ஆட்சியாளர்களுக்கு உவப்பானது இல்லை. அவைகளுக்கு தேவைப்படுவ தெல்லாமே ஆட்டு மந்தைகள். அவர்களை இனவாரியாகப் மேய்ப்பதற்கு ம இ கா, மற்றும் ம சீ சா என்ற கங்காணிகள். கங்காணிகள் நமக்கு கண்கண்ட தெய்வங்களல்லவா?.. மக்களைப் பிளவுபடுத்துகிறார். மக்களின் ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவை தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளே என்று அரசியல் செய்கிறார். கவனிக்கவும்!.. 70-கள் வரை மக்களைப் பிளவுபடுத்தாத தமிழ், சீனப் பள்ளிகள்தாம் இப்போது பிளவுபடுத்துகின்றனவாம்! இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அவருக்கு பக்கத் துணையாக இந்தியர்களையும், சீனர்களையும் பிரதிநிதிப்பதாகச் சொல்லிக்கொண்டு மலேசிய இந்திய காங்கிரசும் மலேசிய சீனர் சங்கமும்.
இப்போது அந்த அரசியல் போய் நிற்கும் இடம், நோன்பு காலங்களில் பள்ளிகளில் முஸ்லீம் மாணவர்கள் பார்க்க முஸ்லீம் அல்லாத மாணவர்கள் கண்டீனில் சாப்பிடக்கூடாது. மிக சமீப காலத்தில், முஸ்லீம் அல்லாத மாணவர்களை நோன்பு காலங்களில் கழிவறைப் பக்கம் போய் சாப்பிடச் சொல்லி தன்னிச்சையாக முடிவெடுத்த பள்ளிகளும் பொது வெளியில் அடையாளப்படுத்தப்பட்டன. 60-களில் இப்படிப்பட்ட சர்ச்சைகளெல்லாம் இருந்ததே கிடையாது. அப்போதும் எனது சக சகோதரர்கள் நோன்பிருந்தனர். மற்றவர்கள் பசி ஆறுதல் அவர்களுக்கு உறுத்தலாகவே இருந்ததில்லை.
எந்த நாட்டிலுமே அதிக பெரும்பான்மையில் இருக்கும் எந்த மதமுமே சிறுபான்மையினரை நசுக்கவே பார்க்கிறது. என்னைச் சுற்றியே, இலங்கை, இந்தியா, பர்மா என்று அடக்குமுறையின் அராஜகக் குரல் ஆர்ப்பாட்டமுடனேயே கேட்கிறது.
“IF YOUR RELIGION REQUIRES YOU TO HATE SOMEONE BECAUSE OF THEIR BELIEF, YOU NEED A NEW RELIGION.” - FB

Comments

Popular Posts