Home Sweet Home

 

Life is funny

Home Sweet Home - வீட்டில் இனிப்பு வீடு (மொழிபெயர்ப்பு உதவி – கூகிள்)

மூன்று மாத ஆஸ்திரேலியா வாசஸ்திற்கு பின்னர் நேற்று நாடு திரும்பினேன். மனசெல்லாம் ஒரே உத்வேகம். நல்லியல்பு எண்ணங்கள் நெஞ்செல்லாம் நிரம்பி வழிந்தன. நான் தீர்மானித்துக் கொண்டேன். ஆஸ்திரேலியாவில் கடைப்பிடித்த நன்னெறிகளை தவறாமல் மலேசியாவிலும் கடைப்பிடிப்பதென்று. அவை..
- காலையில் நேருக்கு நேர் எதிர்படுபவர்களுக்கு வணக்கம் சொல்வது. அவர்கள் அந்நியர்களாக இருந்தாலும்!..
- பஸ்சில் ஏறும் போதும் இறங்கும் போதும் ஓட்டுனருக்கு வணக்கமும், நன்றியும் சொல்வது.
- சாலையில் வாகனத்தை ஓட்டும் போது, போக்குவரத்து விதிகளைத் தவறாமல் பின்பற்றுவது.
- சாலையில் கண்ணியமாக நடந்துகொள்வது.
- வரிசையை மீறாமல் பேணுவது.
- சாப்பிட பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை கவுண்டரில் போய் வைப்பது.
- இன்ன பிற..
இன்று காலை…
எனது வாகனத்தை ஸ்டார்ட் செய்துவிட்டு, இஞ்சின் சூடு ஏறுவதற்காகக் காத்திருந்தேன். ஒரு ஐந்து வீடுகள் தள்ளியிருந்த வீட்டில் வசித்த Medical Professional ஒருவர், தனது காலை நடைப்பயிற்சியில் என்னைக் கடந்து போனார். வணக்கம் சொல்வதற்காக ‘Eye Contact’ வேண்டி அவரின் முகத்தைப் பார்த்தேன். நான் ஒரு ஜீவராசியாகவே அவர் கண்களுக்குத் தோன்றவில்லை. அவரின் ‘Professional’ தகுதிக்கு, இந்த தற்குறி ‘Retiree’ ஒரு ‘Non-existent’!
நான், ‘Bru Coffee’ அருந்தும் வெறியில் இருந்தேன். ‘Cyber Jaya’ -விற்கு கிளம்பிப் போனேன். வழியில், வழக்கத்திற்கு மாறாக ஒரே வாகன நெரிசல்! எனது நான்கு சக்கர வாகனம், ஒரு நான்கு கால்கள் ஆமையாய் ஊர்ந்து கொண்டிருந்தது! எதிரே, கொடிய விபத்து போல என்று யூகித்துக்கொண்டேன். அந்த நெரிசலுக்குக் காரணமான ஸ்தலத்தை கடந்தபோது, அப்படியான எந்த விபத்துமே அங்கே நடந்திருக்கவில்லை! வாகனம் ஒன்றின் டயர் கிழிந்து போயிருந்தது. அதைக் காரோட்டி மாற்றிக்கொண்டிருந்தார். பிற காரோட்டிகள் அதைப் பார்த்க்கொண்டே போனதால் அவ்வளவு நெரிசல்.
‘Cyber Jaya, TM’ கட்டிடத்திற்கு அருகே இருந்த Traffic Light! சிகப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. முதலாவதாக எனது வாகனம். நான், எனது கைப்பேசியை எடுத்து வாட்ஸ் ஆப் வணக்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்திற்கு மாறிவிட்டிருந்தது. அதை உணராமல் நான் இன்னும் கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்குப் பின்னாலிருந்த வாகனம், உரத்த ஹாரன் ஒலியுடன் என்னைக் கடந்து சென்று,
“ஓய், கெல்லிங்!. Paki pagi sudah mabuk kah? !.(Derogatory reference to Malaysian Indian. Racist in nature) காலாங்காத்தாலியே தண்ணி அடிச்சிட்டியாலா?..” என்று கத்தி விட்டு, நடு விரலைக் காட்டிவிட்டுச் சென்றான்.
எனக்கு ‘மண்டைக்கு’ ஏறிவிட்டது!. விரைந்து சென்ற அவனைப் பார்க்க, ‘சடையனைப்’ (சீனன்) போலவும் இருந்தான்; ‘நாட்டானைப்’ (மலாய்க்காரன்) போலவும் இருந்தான். வயது ஏறக்குறைய 40 -லிருந்து 45 -திற்குள்ளிருக்கும்!. அந்த வயதிற்கு அவனுக்கு ஒரு விரல் ‘Obscenity’ தெரிந்திருந்தால் என் வயதிற்கு எனக்கு மூன்று விரல்கள் ‘obscenity’ -யாவது தெரிந்திருக்க வேண்டுமே?. தெரிந்திருந்ததே!. இடது கை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை வட்டமாக மடித்து, அதனுள் வலது கை ஆட்காட்டி விரலை நுழைத்தெடுத்து,
சடையனாக இருந்தால்,
“பீகிலா லூ சீனா கூய்..” (ஃ… யூடா சடப்பயலே)
மலாய்க்காரனாக இருந்தால்,
“பெல்லா லா ஓய் மலாயு போடோ..” (போடா மலாய்க்கார முட்டாள்)
என்று கத்தினேன்.
அதற்கு பின்னர், இன்று காலைவரை என்னிடமிருந்த எல்லா நல்லியல்புகளும் நாசமாய்ப் போயின. எதையுமே, சம்பந்தப்பட்ட நபர் சார்ந்திருந்த இனத்தை முன்னிருத்தி அவமானப்படுத்தும் போக்கே மீண்டும் வந்து சேர்ந்தது.
When in France, Do as the French Do.
பிறகு!.. பிறகென்ன? பாட்டுதான்!..
“சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?...
அட எந்நாடு என்றாலும் அது நம் நட்டுக்கீடாகுமா?..”

1. மலேசியாவிற்கு வந்த விமானம்
2. 6 மணி நேரத்திற்கு தங்கிய lounge
3. Home Sweet Home. இனிய இல்லம்
4. மீண்டும் பேரப்பிள்ளைகளுடன்













Comments

Popular Posts