Hand in gloves.
எனக்கு ஒரு வழக்குரைஞர் நண்பர் இருக்கிறார். அவரது மகனும் எனது பேரனும் ஒரே பள்ளியில் படிப்பதால் ஒரு கோப்பைக் காப்பிக்கு தினமும் சந்தித்துக்கொள்வோம்.
Highly temperamental, reserved, and very focused சுபாவத்தைக் கொண்டவர். யாருடனும் அவ்வளவு எளிதில் நட்பு பாராட்டக் கூடியவர் அல்லர். அவருக்கிருக்கும் அவரின் துறை சாரா ஒரே நண்பன் நான். தனது வழக்குரைனர் தொழிலின் மேல் ஏற்பட்ட சலிப்பால் 100KM தூரத்தில் 24 ஏக்கர் நிலம் வாங்கி பகுதிநேரமாக விவசாயம் செய்து வருகிறார்.
சமூக அக்கறை கொஞ்சமும் இல்லாத ஒரு சுயநலவாதி. அதனால் அடிக்கடி நாங்கள் முரண்பட்டுக்கொள்வோம். ஆயினும் எங்களின் 20 வருட நட்பை அது காவு கொண்டதில்லை.
Financial literacy மிக்கவர். செல்வந்தவராக இருக்கிறார். சமூக, அரசியல் விஷயங்களை அறிவுப்பூர்வமாக அணுகி பேசக்கூடியவராதலால் அவரைச் சந்திக்க நான் மிகவும் பிரியப்படுவதுண்டு.
இப்போது பள்ளி விடுமுறை. ஒரு மாதத்திற்கு மேலாகவே இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. சில வாரங்களாகவே அவர் என்னைச் சந்திக்கத் தவிர்ப்பதுபோல் நான் உணரத் தொடங்கியதால் இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘Missing in action?’ என்று கேட்டு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தேன். ஒரு கதை இருப்பதாகச் சொல்லி சந்திக்க அழைத்தார்.
சந்தித்துக்கொண்டோம்!.
நண்பர், வருடந்தோரும் ஜூன் மாதத்தில் ‘Asuntha’ மருத்துவமனையில் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து வருபவர்.
இந்த அசுந்தா மருத்துமனை வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த ஒன்று. 1959-லிருந்து மருத்துவ சேவை வழங்கிவரும் பழம்பெரும் மருத்துவமனை.
நண்பர், இந்த வருடமும் ஜூன் மாதம் பரிசோதனைக்கு சென்றிருக்கிறார். இவர், வயது 50-களின் இறுதியில் இருப்பவர். நெஞ்சுப் பகுதியில் ஏதோ வலி இருப்பதாகச் சொன்னதால் ‘trade Mill’ -ல் ஓட வைக்கப்பட்டார். லெவல் 6 வரை இருக்கும் டிரேட் மில்லில் 5 வரை ஓடியதும் நண்பர் சற்று சிரமப்படத் தொடங்கினார்.
டாக்டர், உடனே ‘CT-ANGIOGRAM’ செய்தால் reading இன்னும் துல்லியமாக இருக்குமென்று பரிந்துரை செய்திருக்கிறார். நண்பர், உடன்பட்டார். ‘CT-ANGIOGRAM’ செய்யப்பட்டது. எல்லா சோதனைகளுக்குப் பின்னர், டாக்டர் முடிவாக சொன்னது,
‘ரத்த நாளங்களில் 80% block இருக்கிறது. நீங்கள் சீக்கிரமாக அறுவைச் சிகிச்சை செய்துக்கொள்வது நல்லது. குடும்பத்தினரை கலந்தாலோசித்துவிட்டுச் சொல்லுங்கள்.’
நண்பரால் அந்தச் செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பவர். பசும்பால், நெய், இனிப்பு சம்பந்தப்பட்ட உணவை தொடக்கூட மாட்டார். ஒரு வேளை மட்டுமே சாப்பாடு. நிறைய காய்கறிகளை உணவாக எடுத்துக்கொள்பவர். நிலத்தில் வேர்வை சிந்த உழைப்பவரும்கூட!. இருந்தும்?..
மனைவி உடனே, நண்பனின் தாய்மாமன்கள் இருவருக்கும் ‘80%’ தகவலைச் சொல்லி வைத்தார்.
தாய்மாமன்களில் ஒருவர், தனது 70-களில் ‘Parkinson’ நோயால் அவதிப்படுபவர். மற்றொருவருக்கு ‘Dementia’.
நண்பர், கடந்த ஒரு மாத காலமாக சட்டைப் பையில் ‘Statin’ மாத்திரைகளுடனேயே ‘அந்தத் தருணத்தின்’ தாக்குதலை எண்ணி பயந்துகொண்டே நடமாடியிருக்கிறார். அந்த அச்சம்தான் என்னையும் சந்திக்க விடாமல் அவரைத் தடுத்திருக்கிறது.
இரண்டாவது அலோசனை ஒன்றையும் தெரிந்துக்கொள்ள விரும்பினார். ‘University Malaya Specialist Centre’-ல் இருந்த மருத்துவ புரோபசர் ஒருவரை அனுகினார். அசுந்தா ஆஸ்பிடல் கொடுத்த டிரேட் மில் ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு அவர் அபிப்பிராயப்பட்டது.
‘80% block இருப்பது உண்மையானல் உங்களால் எப்படி லெவல் 5 வரை செய்ய முடிந்தது. லெவல் 3-லேயே கொலேப்ஸ் ஆகியிருப்பீர்களே?.’
நண்பர், அங்கேயே ‘conventional angiogram’ ஒன்றைச் செய்துக்கொள்ளத் தீர்மானித்தார். அதன் முடிவு வேறாக இருந்தது. ‘mild block’ இருப்பது நிச்சயமானது. ஆனால், மருந்து எடுத்துக்கொள்ளும்படிக்கு ஏதுமில்லை என்று ஆலோசனை சொன்னார்.
ஒரு டாக்டரால் கண்டுபிடிக்கப்பட்ட 80% அடைப்பு, இன்னொரு டாக்டரால் எப்படி கண்டுப்பிடிக்க முடியாமல் போனது?. மருத்துவ ஆலோசனைகள் என்பது மருத்துவருக்கு மருத்துவர் மாறுபடும் என்று இதைக் கடந்து போக முடியுமா?.
நண்பர், ஒரு லாயர்!. அறிவாளி!. அவருக்கே இந்த நிலையென்றால் காப்புறுதி எடுத்து வைத்திருக்கும் பாமர மக்களின் நிலை?.
தாய்மாமன்கள் இருவரும் நண்பனின் ஆரோக்கியத்தை அறிந்து இப்படி சொன்னார்களாம்.
“You are blessed with good health..”
நான் நண்பனிடம் சொன்னேன்.
“Next time, when you visit your uncles, carry a black cat along and caress it when you enter their house. See, whether they get the message or not..”
நண்பர் சிரித்தார்… சிரித்தார்… அப்படிச் சிரித்தார்.
யாரிடமும் நெருக்கம் பாராட்டாதவர் என்னிடம் மட்டும் நெருக்கம் பாராட்டுவதற்கு எனது இந்த ‘Sense of humor’ ஒரு காரணம்!.

Comments
Post a Comment