Graduation
Memory Lane
Graduation
எனது பேத்தி ஹிரன்யா தேவதா, Kindergarten முடிந்து ஒன்றாம் வகுப்பு போக ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அவள் மற்றும் உடன் படித்த சக மாணவர்களின் பாலர் வகுப்பு ‘Graduation Certificates’ கடந்த வாரம்தான் ரெடி ஆனது. ஆமாம், பாலர் வகுப்பிற்குகூட Graduation Certificate உள்ளது.
ஆரவாரத்துடன் கொண்டாடி ‘பட்டம் பெறுவதிலுள்ள’ சந்தோஷத்தை அப்பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து மகிழ வேண்டிய நிகழ்வு. அப்படியே நடந்தேறியது. சீன, மலாய் பாடல்களுக்கு மாணவ மாணவியர் அபிநயம் பிடித்து ஆடிய வேளையில், இந்தியர்களுக்காக இந்தி பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டு, அபிநயம் பிடிக்கப்பட்டது.
இந்நாட்டில் ‘Kindergarten’ பள்ளிகளைத் தோற்றுவித்து நடத்துபவர்கள் 90% சதவிகித்தத்திற்கும் மேல் சீனர்களாகவே இருப்பதால், அங்கு பயிலும் எல்லா இன பிள்ளைகளுக்கும் சீன மொழியையும் ஒரு பாடமாக பாடதிட்டத்தில் இணைத்து போதிக்கின்றனர். தாய் மொழியில் ஒரு அட்சரம் எழுதவோ, படிக்கவோ, பேசவோ தெரியாத, இந்திய குழந்தைகள்கூட சீன அரிசுவடியையும் படித்துக்கொண்டே வருகின்றனர். இதனால், சீன மொழியின் வாழ்வும், நிலைத் தன்மையும் ‘மொழி எங்கள் உயிருக்கு நேர்..’ என்றோ ‘மொழியைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்..’ என்றோ கோஷங்கள் ஏதும் போடாமலேயே அடுத்த இனங்களுக்கும் சத்தமில்லாமல் அறிமுகம் செய்து தமது மொழியின் பயன்பாட்டை பாதுகாத்துக்கொள்கின்றனர். ஆனால் நாமோ, ‘நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க..’ என்று சக தமிழனைப் பார்த்து ஆச்சரியம் கொள்ளும் நிலையிலேயே இருக்கிறோம்.
Reunion
எனது பேரப் பிள்ளைகள் ஹிரிதிக் கேசவா, காயத்ரி மற்றும் ஹிரன்யா தேவதா மூவரும் ‘San Lorenzo Kindergarten, Cyber Jaya’-வில் படித்தவர்கள்.
2015-ல் அந்தப் பள்ளி தோற்றுவிக்கப்பட்டபோது முதல் முதலாக அப்பள்ளியில் படித்த மாணவர்களில் ஹிரிதிக்கும் ஒருவன். அவன், 2018 வரை நான்கு வருடங்கள் அங்கு படித்தான். அவனைத் தொடர்ந்து 2016-ல் அப்பள்ளியில் சேர்ந்த காயத்ரி, 2019 வரை அவள் ஒரு நான்கு வருடங்கள் படித்துவிட்டு 2020-ல் ஆஸ்திரேலியாவிற்குப் பயணமானாள்.
நான்கு வருடங்களுக்குப் பின்னர் மலேசியா வந்த காயத்ரி, நேற்று ஹிரன்யாவின் ‘Graduation Certificate’-ஐ பெறும் பொருட்டு ஹிரித்திக்குடன் ‘San Lorenzo, Cyber Jaya’ -விற்குச் சென்றாள்.
‘San Lorenzo, Cyber Jaya’-வின் நிர்வாகி மற்றும் உரிமையாளரின் பெயர் Ms. Chloe. 2015-ல் அப்பள்ளியை ஆரம்பித்தபோது, எந்த தொழில் முதலீட்டையும்போல அப்பள்ளியின் வெற்றி நிச்சயமற்ற ஒன்று!. துணிந்து முதலீடு செய்தாகிவிட்டது. வெற்றி பெற்றால், வாழ்வாதாரத்திற்கு கையில் ஒரு வணிகம். தோற்றுப் போனால் ஒரு படிப்பினை!. மீண்டும் இன்னொரு தேடல்!.
‘Track record’ என்று எதுமில்லாத அந்தப் புதிய பள்ளியின் செயல்பாட்டில் பூரண நம்பிக்கைக்கொண்டு அங்கு சேர்ந்து அவளைக் கரைச் சேர்த்துவிட்ட முதல் இரண்டு ‘Batch’-சை சேர்ந்தவர்கள் ஹிரித்திக்கும், காயத்ரியும்.
இப்போது, அப்பள்ளி இரண்டு கடை வீடுகளுக்கு விரிவடைந்து, 60-ம் குறையாத மாணவர்களுடன் குழந்தைப் பராமரிப்பு மையமாகவும் வளர்ந்துவிட்டதில் அதன் வெற்றி தெரிகிறது.
நேற்று, நான்கு வருடங்களுக்குப் பின்னர் ஹிரிதிக்கையும், காயத்ரியையும் பார்த்தபோது, Ms. Chloe உணர்ச்சிவயப்பட்டுப் போனார். அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டார். நன்றியைக் கண்கள் காட்ட முனைந்தபோது, அவர் தடுக்க விரும்பவில்லை.
காயத்ரியுடன் படித்த ‘Danya’ என்ற சிறுமி இன்னும் அங்கே ‘Daycare Centre’-ல் இருந்து வருகிறாள். Ms. Chloe, காயத்ரியை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தபோது, பாவம் அவள் இவளை மறந்துவிட்டிருந்தாள்.
- சீன நாடமொன்றில் பங்கெடுத்த உடையில் ஹிரன்யா
- சக நடிகைகளுடன்
- குழு கொண்டாட்டத்தில்
- Graduation Certificate

Comments
Post a Comment