'சங்கி'

 


கே. எஸ், 

'சங்கி' என்ற சொல் 'இந்துக்களை' இழிவுபடுத்தும் சொல் என்று சொல்கிறாய். எங்கிருந்து இந்த அர்த்தத்தைப் பெற்றாய் என்று அறிய ஆவலாய் உள்ளேன்.

அனுமன் மீதிருந்த பிரேமையால் துளசிதாசர் இயற்றிய 'அனுமன் சாலிசா'வில், கீழ்காணும் பாடல் வருகிறது.
'மஹாவீர விக்ரம பஜரங்கீ
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ'.
ஸங்கி/சங்கி என்றால் பாடலில் நண்பன் என்று பொருள்படுவதாக விளக்கப்பட்டுள்ளது.
1951-ம் ஆண்டு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (RSS) உடன் கலந்தாலோசித்தப்பின், சியாமா பிரசாத் முகர்ஜியால் பாரதிய ஜனதா சங்கம் நிறுவப்படுகிறது. அதன் ஹிந்தி பெயர், 'ஜன சங்'. ஆக, அக்கட்சியில் அங்கம் வகித்தவர்கள் சங்கி என்று தம்மை அழைத்துக்கொண்டனர்.
ஆக, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொள்கைகளின்பால் சார்புள்ளவர்கள் சங்கிகளாயினர். அவர்கள் ஒரு மதம் சார்ந்த தீவிரவாதம் பேசுவார்கள். கடந்தகால கொடுமைகளுக்கு இப்போது கொடுமை செய்து 'பலிக்குப் பலி' என்று நியாயம் தேடப் பார்ப்பார்கள்.
மிதவாத இந்துக்கள் எந்தக் காலத்திலும் தம்மை சங்கி என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள். அதை பெருத்த அவமானமாகவே கருதிடுவர்.
பதிவு நேர்மையுடனேயே எழுதப்பட்டுள்ளது. இதில் நகைப்பதற்கு ஏதும் இல்லை.
'சமயத்தில் விட்டுக்கொடுத்தல் ஏமாளித்தனமாகக் கருதப்படலாம்..' என்ற வரியும், பின்வரும் வாக்கியங்களும் உனக்கு காஷ்மீரில் நடந்த கொடுமையில் ஓர் உடன்பாடு இருப்பதுபோல் தோன்றுகிறது. இதுதான் சங்கிகள் நம்பும் தீவிரவாதம்.
எனவே, சங்கி என்பது அனைத்து இந்துக்களையும் அவதூறு செய்யும் சொல் கிடையாது. அதை, kling என்ற சொல்லுடன் ஒப்பிடுவது தகவல் பிழையாகும். 🤝

Comments

Popular Posts