ஏறு தழுவுதல்

 


கோலாலம்புர் குசும்பு – 84

எடு புடி : ஒரே கொழப்பமா இருக்குண்ணா!. நெனைக்க நெனைக்க மண்ட காயுதுண்ணா?..
மீ : ஐயையோ!. ஏன்டா, இன்னா ஆச்சி?.
எடு புடி : நா ஆறாப்பு வரிக்கும்தான் தமுழ் படிச்சனா. அதனாலியோ என்னமோ எனக்கு புரியலண்ணா. அதான் உங்ககிட்ட கேக்கலான்னு வந்தன்.
மீ : அடப் பாவி!. நானும் அவ்ளோதானடா படிச்சிருக்கன். சரி பரவால்ல கேளு!. முடிஞ்சா சொல்றன்.
எடு புடி : ‘தழுவுதல்’ன்னா என்னாண்ணா?.
மீ : டேய், நெசமாவே கேக்குறியா இல்ல வெடக்கிறியாடா?.
எடு புடி : நெசம்மாதாண்ணா கேக்கறன்.
சொல்லுங்கண்ணா..
மீ : ம்ம்.. ‘தழுவுதல்’ன்னா கட்டி அணைக்கிறதுன்னு வெச்சுக்கியேன்.
எடு புடி : கட்டி அணைக்கிற எடத்துல வன்முறைக்கு எடம் இருக்குமாண்ணே?.
மீ : டேய், நீ இன்னா கொடுமக்காரனாடா? கட்டிப் புடிச்சி தழுவுறப்ப ஏன்டா சித்தரவதைய பத்தி நெனைக்கிற?. ம்.. ஒனக்கு இன்னா கீலாவா புடிச்சிருக்கு?..
எடு புடி : ஆய்யோ, அதனாலதாண்ணா எனக்கு மூளையே கொழம்பி கெடக்குது. ஏறுதழுவுதல்ன்னு ஒரு வார்த்தைண்ணா. அந்த வார்த்தைய பிரிச்சி எழுதுனா, ஏறு + தழுவுதல் = ஏறுதழுவுதல். நீங்களே சொல்லுங்கண்ணா. இதுல ரெண்டாவது படந்தானேண்ணா ‘ஏறு+தழுவுதல்?. ஒன்னாவத எப்பிடி ‘ஏறுதழுவுதல்’ன்னு சொல்ல முடியும்?.
மீ : 🤦🤦 நம்ம நாட்டுக்கு இது ரொம்ப முக்கியமாடா?.

Comments

Popular Posts