வெட்கமில்லை… வெட்கமில்லை…

 



வெட்கமில்லை… வெட்கமில்லை… (1)

பள்ளி நாட்களில் எனது பேரப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது காலையில் நான், ‘BFM’ வானொலியின் ஆங்கிலச் செய்தி வாசிப்பை தவறாமல் கேட்பது வழக்கம்.
அரைமணி நேர இடைவெளியில் செய்திகள் வாசிக்கப்படும். ஆறரை, ஏழு மற்றும் ஏழரை மணி செய்திகளுக்குப் பின்னர் உலக, உள்ளூர் பங்கு சந்தை நிலவரங்கள் அலசப்படுவதால் அந்த இடைவெளியில் நான் ‘THR Raaga’-வின் ஒலிபரப்புகளைக் கேட்பேன். அது, உதயா மற்றும் விகடகவி மகேன் நடத்தும் கலக்கல் காலை நிகழ்ச்சி.
இன்றும் அப்படி கேட்டுக்கொண்டிருந்தபோது, உதயா உரையாடலினூடே மகேனிடம், ‘நீங்கதான் காப்பி குடிக்கிறதெல்லாம் நிப்பாட்டி வருஷ கணக்கு ஆவுதே..’ எனும் பொருள்பட ஒரு வாக்கியத்தை விட்டார். பின் தொடர்ந்த உரையாடலுக்கிடையே பாவம் மகேனும், அந்த வாக்கியத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளும் ‘presence of mind’ இல்லாமல் இப்படி சொன்னார்.
‘ஒரு கப் லெவிஸ்தா காப்பி மறந்துறாதீங்க. அத குடிக்கும்போதே அந்த freshness உங்ககிட்ட பரவிடும். திரும்பவும் full சார்ஜ் ஆயிவீங்க. லெவிஸ்தா காப்பிய ஒரு முற குடிச்சி பாருங்க. நீங்களே மாறீடுவீங்க..’
‘காலீல ஒரு கப் லெவிஸ்தா பிரீபியம் காப்பிய குடிச்சி பாருங்க.. அதன் சுவையே வேற.. ம்மா..’,
‘லெவிஸ்தா குடி.. அதையே குடி..’
இவர் காப்பி குடிப்பதை நிறுத்தியே வருடங்கள் ஆகின்றன என்று சக DJ-வான உதயாவே சில நிமிடங்களுக்கு முன்னர்தான் சத்தியப் பிரமானம்போல் அச்செய்தியைச் சொல்லி வைத்தார். ஆனால், மகேனோ அந்தப் பிரக்ஞையே இல்லாமல் உமிழ்நீர் சொட்டச் சொட்ட காப்பிப் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார்.
‘கவி’க்கு பொய் அழகுதான்!. அதற்காக!.
இதைத்தான் ஆங்கிலத்தில் ‘lying through his teeth.’ என்று சொல்வார்கள்.
இந்த சமூக அறம்தான் நடிகை சாய் பல்லவி பேசியது. ‘எவ்வளவு கோடி கொடுத்தாலும் நான் நம்பாத ஒன்றை பிறருக்கு விளம்பரம் செய்யமாட்டேன்.’
மகேன் காப்பியே அருந்துவதில்லையாம். நல்ல பழக்கம்!. அதற்கு ஆரோக்கிய விழிப்புணர்வே காரணமாக இருக்கக்கூடும். அதே ஆரோக்கியத்தை அவரின் காப்பி புராணத்தை செவிமடுக்கும் நேயர்களுக்கு அறிவுறுத்தமாட்டாரா?.
‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..’ என்று விழிப்புடன் இருக்க வேண்டியது பயனீட்டாளர்களே. காப்பி குடிக்கும் பழக்கம் இல்லாமலேயே அதன் மகிமையை அவர்கள் கூவிக்கொள்வது பிழைப்புக்காக!.
சாய் பல்லவியின் சமூக அக்கறை அவர்களுக்கு இல்லாததே அவர்களுக்கான அடையாளம்.
நாளையே தமது சினிமாவிலோ, மேடையிலோ கீழுள்ள வசனத்தைப் பேசி தனது மொழி மற்றும் இன பற்றைப் பறைசாற்றிக்கொண்டால் போயிற்று!.
‘ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய்
முழங்கு சங்கே..’
வேஷம்தானே!. போட்டால் ஆயிற்று.🤦
பயனீட்டாளர் என்ற முறையில் நமக்கான செய்தி இணைப்பிலிருக்கும் காணொளியில் இருக்கிறது.
யாரிடமும் ஏமாறாதீர்கள். விழிப்புமிக்க பயனீட்டாளராய் இருப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. ஊடகம் பொய் சொல்லாதென்று நம்பாதீர்கள். Fake news -சின் உற்பத்திக்கூடம் ஊடகங்களே! 😡

Comments

Popular Posts