ஜம்ரி வினோத் காளிமுத்து

 


பேசாப் பொருள் பேசினேன் – 27

3R
பகாங் மாணிலத்தின் இந்நாள் சுல்தான் (இவர் நாட்டின் முன்னாள் மாமன்னரும் ஆவார்) 3R எனப்படும் Race, Religion and Royalty பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை யாரும்வெளியிடலாகாது என்று ஆலோசனை கூறியுள்ளார். இது, சமீபத்தில் நடந்து முடிந்த தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, ஜம்ரி வினோத் காளிமுத்து என்ற இஸ்லாமியத் தீவிரவாத போதகன், ‘இந்துக்கள் மது அருந்திவிட்டு வேல்.. வேல். என்று கூச்சலிட்டு ஆடுவதாக’ பகடி செய்து வெளியிட்டிருந்த காணோளியையொட்டி அவர் கொடுத்த எச்சரிக்கையாகும். அந்த எச்சரிக்கையைப் படிப்பவர்கள், ஒரு சுல்தான் நாட்டின் மத நல்லினக்கத்தின்பால் காட்டும் அக்கறையை எண்ணிப் பூரித்துப் போகலாம். ஆனால், நடப்பு ஒன்றும் அப்படி புளகாங்கிதம் அடைந்துவிடும் லட்சணத்தில் இல்லையென்பதே நிதர்சனம்.
- 28 ஆகஸ்ட் 2009-ல் ஷா ஆலாம் செக்க்ஷன் 19-ல் இருந்த பழம் பெரும் கோவில் ஒன்று மாற்று இடமான செக்க்ஷன் 23-ல் நிர்மானிக்கபடவிருந்ததையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50 ஆர்ப்பாட்டக்காரர்கள் மாட்டின் தலையொன்றை எடுத்துக்கொண்டுப்போய் ஷா ஆலாம் நகரான்மைக் கழக கட்டிடத்தின் வாசலில் கிடத்தி, தலையை உதைத்தும், அதன் மேல் எச்சிலை உமிழ்ந்தும் இந்துக்களின் மத நம்பிக்கையை கேலி செய்யும் விதமாக தமது அதிருப்தியைத் தெரிவித்தனர்.
- 2014-ல் இந்தியாவில் இறைச்சிக்காக பசுவதைச் செய்ததாக சந்தேகித்து 10 பேர் அடித்தே கொள்ளப்பட்டதின் எதிரொலியாக இந்நாட்டில் டாக்டர் முகமது அஸ்ரி என்ற மதகுரு, பசு வழிப்பாட்டை கிண்டலடித்து கவிதையொன்றை எழுதி இந்துக்களை நோகடித்தான்.
- 2006-ல் பல இந்துக் கோவில்கள் அரசாங்க நிலத்தில் அனுமதின்றி கட்டப்பட்டிருப்பதாகச் கூறி, இடித்து தரைமட்டம் ஆக்கப்படுகின்றன.
- 27 ஏப்ரல் 2019-ல் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி இந்து மதத்தை நிந்தனைச் செய்து 1 நிமிடம் 10 செகண்ட் காணோளி ஒன்று பதிவேற்றம் செய்யப்படுகிறது.
- 15 ஆகஸ்ட் 2019-ல் நாட்டில் PR status கீழிருக்கும் ஜாகீர் நாய்க், கடந்த நூற்றாண்டில் இந்நாட்டில் குடியேறி பிரஜைகளாகிவிட்ட சீனர்கள், சீனாவிற்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று பரிந்துரைச் செய்கிறான். வெறும் நிரந்த வசிப்பிட தகுதி மட்டுமே உள்ள ஒரு அயோக்கியன், நாட்டின் பிரஜையைப் பார்த்து இதைச் சொல்கிறான்.
இப்படியாக, நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் சிறுபான்மை மதங்களை, இனங்களைச் சிறுமைப்படுத்தி நடந்தேறியுள்ளன. ஆனால், யாருமே எந்தச் சட்டத்திற்கும் பயந்ததாகத் தெரியவில்லை.
ஜூலை 11 2024-ல் பிரதமர் ஆன்வர் இப்ராஹிம் நாட்டின் 3R பிரச்சினைகளைத் தொட்டு பிறரின் மனம் புண்படும் அறிக்கைகளை வெளியிடுபவர்களை நோக்கி இப்படியொரு எச்சரிக்கை விடுக்கிறான்.
“There will be no exception for those who disobey the laws and challenges the constitution. The message is enough. Consider this a final warning.”
ஜம்ரி வினோத் காளிமுத்து, ‘வேல்.. வேல்..’ காணொளி செய்து வெளியிட்டது 10/03/2025. ஆன்வார் இப்ராஹிமின் இறுதி எச்சரிக்கையோ 11 ஜூலை 2024-ல் கொடுக்கப்பட்டது. ஆக, உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் இன்னும் யாருக்காக காத்திருக்கிறது? எல்லாமே அரசியல். எதிலுமே அரசியல்.
எந்த சட்டமும் பாமரனை அதிகாரம் செய்யத்தானோ?. நீதி பரிபாலனம் செய்ய சட்டத்திற்கு இனமும் மதமும்கூட ஒரு பொருட்படுத்தத்தக்க தேவைதான் போல?.
இனம், மதம், அரசுரிமை மூன்றும் அந்தந்த மாகாணங்களின் சுல்தான்களின் காட்டுப்பாட்டிற்கின் கீழ் வருபவை. ஒரு மதத்தை நிந்தனை செய்வது அரச நிந்தனைக்கு ஒப்பான செயல். ‘ராஜ பார்வையின்’ கண்னெதிரிலேயேதான் மேற்காணும் அனைத்து அட்டூழியங்களும் நடந்தேறின. ஆனால், அவை பார்வைக்குத்தான் தெரியவில்லை.
‘HE WHO ALLOWS OPPERESSION SHARES THE CRIME.’ – Desiderius Erasmus.

Comments

Popular Posts