அட்சரப்பியாசம் ஆரம்பம்
Memory Lane – 40
பேத்தி ஹிரண்யா, தனது அண்ணனைப்போலவே ‘Montessori’ பள்ளியில் கற்றவள். இத்தாலிய கல்வியாளார் ‘Maria Montessori’ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய கல்வி முறை. ஐம்புலன்சார் கல்வி. இது 1907-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் திகதி தனது முதல் பள்ளியை ரோம் நகரில் தோற்றுவித்தார். அந்த பள்ளிக்கு அவர் வைத்த பெயர், ‘The casa dei Mambini’ or ‘Children’s House’.
ஒரு தகவலாக இதை அறிய நேர்ந்தபோது ஆச்சரியமாக இருந்தது. தமது ஆரம்ப கல்வியை ‘Montessori’ முறைக் கல்வியில் பயின்ற சில பிரபலங்களின் பெயர்கள்.
- Larry Page – Google Co-Founder
- Sergey Brin – Google Co-Founder
- Jeffrey Bezos – Founder of Amazon.com
- Mark Zuckerberg – Co-Founder of Facebook
- Bill Gates – Founder of Microsoft
- Anne Frank – Author of The Diary of Anne Frank
- Gabriel Garcia Marquez – Nobel Prize winner for Literature
- Prince William & Prince Harry – British Royal Family
- David Blaine – A Magician
என்று ஒரு நீண்ட பரம்பரியம் இந்த கல்வி முறைக்கு உள்ளது.
இதே கல்வி முறையில் கற்றவர்தான் ‘Katharine Graham’ என்பவரும். இவர், ‘The Washington Post’ என்ற பிரபலமான அமெரிக்க பத்திரிக்கையின் உரிமையாளரும் நிர்வாகியும் ஆவார். இவர், ‘Montessori’ பற்றி தனது சுய சரிதையில் சொன்ன பிரபல்யமான வாசகம் ஒன்று.
“The Montessory method – Learning by doing – once again became my stock in trade..”
வியாபாரமாகிவிட்ட எந்தத் துறையும் தனது ஒரிஜினாலிட்டியை தொடர்ந்து நிலைநாட்டிக் கொள்ள முடியாமல் ‘Compromise’ செய்துக்கொண்ட சந்தர்ப்பங்களே நிதர்சனமாய் இருக்கும் இவ்வேளையில் எம் நாட்டில் அதன் தரம் எந்த அளவிற்கு ‘சனாதனமாய்’ இருக்கிறதோ தெரியவில்லை.
கல்வி என்பது கொஞ்மாய் எண்ணும் எழுத்தும், நிறைய விளையாட்டு, தயக்கமில்லாமல் தன்னை வெளிப்படுத்துவது, வரம்புக்குட்பட்ட சுதந்திரம், சக மாணவர்களுடன் பேதம் பாராமல் பழகுதல் என்று இருந்த ‘Care free’ சூழல் முடிந்து பேத்தி முதலாமாண்டு போக ஆரம்பித்திருக்கிறாள். ‘Divine Intervention’ -ஐயும் நெற்றியில் தீட்டியாகிவிட்டது. எனது எல்லையை நான் மீறலாகாது.
ஒரு வாரம் ஆகி விட்டது. ‘Montessori’ பள்ளிக்குப் போன அதே ஆர்வத்துடனேயே ஒன்றாம் வகுப்பிற்கும் போய்க்கொண்டிருக்கிறாள். ‘IGCSC’ பாடதிட்டம். பேரன் ஒன்றாம் வகுப்பிற்கு போகும்போது வகுப்பிற்கு 20 மாணவர்கள் என்று 2 ஒன்றாம் வகுப்புகள் இருந்த காலம் போய், இப்போது பேத்தியின் வகுப்பில் வெறும் 7 மாணவர்களே இருக்கின்றனர். நிர்வாகம் கலவரப்பட்டுப் போய் கிடக்கிறது.
கல்வியை ‘Acedemic Excellence’-ஐ நோக்கி ஓடும் பந்தயமாக்கிவிடாமல் கற்றலின் ஆனந்தத்தை அவர்களுக்குள் தூண்டிவிட்டாலே போதுமானது.
நேற்று, மரங்களுக்கு நடுவே வண்ணத்துப்பூச்சி ஒன்று இருக்கும் படமோன்றை வரைந்திருந்தாள். ‘தூறல் போல் ஏதோ படமெங்கும் தெரிகிறதே அது என்ன’ என்றேன். ‘அது பனிமழை’ என்றாள். ‘மேலே வலது புறத்தில் சூரியன் உதிக்கிறதே? எப்படி பனி பெய்யும்?’ என்று பெரியவர்களுக்கே உரிய ‘லாஜிக்கில்’ அவளை மடக்கிவிட்ட தோரனையில் கேட்டேன். ஒரு வினாடிகூட தாமதிக்காமல் அவள் சொன்ன பதில்!.
‘இது ஒரு மாய உலகம்…(A Magic Land)’
அவள், ஒரு கான்செப்டுடன் தெளிவாகவே வரைந்திருக்கிறாள். எனக்குதான் அதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனது.
அவள் ஒரு பாடகி!. இசை மற்றும் ஓவியத்தில் ஆர்வம் காட்டுகிறாள். அந்தத் திறமைகளைத் தூண்டிவிட்டாள் பிரகாசிப்பாள் என்று தோன்றுகிறது. காலம், அவளுடைய கைகளில். காத்திருப்போம்..
முதல் நாள், அவள் பள்ளிக்குப் போன தருணத்தை நான் ஆவணப்படுத்தியிருக்கிறேன். ஒரு காலம் வரும்போது, நன்றியுடன் அவள் என்னை நினைத்துக்கொள்வாள்! அப்போது, அவள் கண்களில் துளிர்ந்து திரளும் கண்ணீரில் நான், உயிர்த்தெழுவேன்.
- பள்ளிக்கு போகும் படங்கள்
- ஓவியத்துடன் ஓவியர்
- Magic Land ஓவியத்துடன்
எனது ஒரு வார ரிப்போர்ட் கார்ட்
After a hard day's walking, taking a breather.

Comments
Post a Comment