எனது இரண்டாவது அண்ணனுடன்
Memory Lane - 106
நான் நிரீச்சுரவாதியாக இருப்பதற்கு படைத்தவனின் இந்தப் பாராபட்சம்தான் காரணம். 
வெறும் 6-ம் வகுப்புவரை மட்டுமே கல்வித் தகுதி. ஆங்கிலத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர்.
சில வருடங்கள் எஸ்டேட்டில் வேலை செய்துவிட்டு ஹோட்டலில் கிளினராக வேலையைத் தொடங்கியவர். பின்னர், ஹோட்டல் பணியாளராக இருந்துகொண்டே மலேசிய ஹோட்டல் தொழிலாளர்கள் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு தேசிய அளவில் செயற்குழு உறுப்பினராக இயங்கினார். அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு எந்த நேரத்திலும் ஆளாகக்கூடிய ஆபத்து இருந்த 1970-கள்.
ஒரு காலத்தில், தொழிற்சங்க பிரச்சினைகளில் அனுபவமிக்க ஒரு நபர் 'Human Resources Manager'-ஆக வந்தால் தொழிற்சங்க பேச்சுவார்த்தைகளுக்கு அனுகூலமாக இருக்கும் என்று நிர்வாகம் நம்பியதால் அப்பதவிக்கு தேர்வானவர்.
பதவி ஓய்விற்கு பின்னரும் சில நிறுவனங்களுக்கு அவரின் அனுபவம் சில மாதங்களுக்கு முன்புவரை தேவைப்பட்டது. இப்போது அவராகவே ஓய்வெடுத்துக்கொள்ள தீர்மானித்துக் கொண்டார்.
வெறும் 6-ம் வகுப்பு வரையிலுமே கல்வித் தகுதி. ஆயினும், ஒரு தொழிற்சங்கவாதியா, Human Resources Manager-ஆக தன்னை வளர்த்துக்கொள்ளும்படிக்கு அவர் பெற்றக் கல்வியின் அஸ்திவாரம் இருந்தது.
அது ஒரு தலைமுறை!. அப்படியொரு கல்வி!. 

Comments
Post a Comment