அதிகாரத்தின் ஆட்சி மையமும் தலைமை நீதிபதி பதவியும்.



துங்கு மைமுன் பின் துவான் மாட் என்பவர் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி. நாட்டின் பத்தாவது தலைமை நீதிபதியும் ஆவார். அவரின் சிறப்புத் தகுதிகளாக பலராலும் பார்க்கபடும் அம்சங்கள் நீதித்துறை சுதந்திரத்தை எந்த அதிகார அச்சுருத்தலுக்கும் விட்டுக்கொடுக்காத திடசித்தம், அரசியலமைப்புச் சட்டத்தை தீர்க்கமாய் பேணுதல், நீதிபதிகளின் நியமனத்தில் நீதிபதிகள் நியமன சட்டம் 2009-யை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பின்பற்றுதல்.
இவர் தீர்ப்பளித்த முக்கியமான மற்றும் ‘Landmark’ வழக்குகள் சில.
- மங்கோலிய அழகி அல்தான்துயா ஷரிபூ கொலையின் மேல் முறையீட்டில் (2013-ல்) ஹைகோர்ட் குற்றவாளிகள் என்று இரண்டு காவலாளிகளின் மேல் அளித்திருந்த தீர்ப்பை ஒரு‘Court of Appeal Judge’-ஆக மறுபரிசீலனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.
- இந்திரா காந்தியின் மகளின் கட்டாய மதமாற்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்த ஒரே நிதிபதி. மற்ற இரண்டு நீதிபதிகளும் வழக்கிற்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லினர்.
- எதிர்க்கட்சி தலைவரான கர்பால் சிங் மேல் கொண்டுவரப்பட்ட அரச நிந்தனை வழக்கில் மற்ற இரண்டு நீதிபதிகளுடன் முரன்பட்டு சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பு சொன்னவர்.
- SRC International ஊழல் வழக்கில் தலைமை நீதிபதியாக முன்னால் முதலமைச்சர் நஜீப் பின் ராசாக்கிற்கு 12 வருட சிறைத் தண்டனை கொடுத்தவர்.
ஜுலை 2 2025-ம் திகதியோடு அவரின் பதவி காலம் நிறைவு பெறுகிறது. 66 வயதில் ஓர் அரசாங்க்க ஊழியர் பதவி ஓய்வு பெருவதில் ஏதும் சிக்கலில்லைதான்.
ஆனால், நடைமுறையில் முன்னால் தலைமை நீதிபதிகள் யாவருக்குமே மேலும் 6 மாதங்களுக்கு பதவிகாலம் நீட்டிக்கப்பட்டே இருந்தது. ஆனால், துங்கு மைமுன் விவகாரத்தில் வழக்கறிஞர் மற்றும் பல சிவில் சமூகங்கள் அவரின் பதவி காலத்தை நீட்டிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தும் PM ஆன்வார் அதைப் புறக்கணித்து இருக்கிறார்.
அதற்கு அவர் சொன்ன சொத்தைக் காரணம், ‘இச்செயல் நீதிதுறையின் சுதந்திரதிற்கு எதிரானது. இது, பிற அரசாங்க அதிகாரிகளும் தமது பதிகாலத்தை நீட்டிக்கச் சொல்லிக் கேட்க வழிவகுக்கும்.’
நட்டின் தலைமை நீதிபதியின் பதவியை பிற அரசாங்க பதவிகளுடன் ஒப்பிடுவது, இவனைப் போன்ற அரசாங்க மூடர்களே செய்வர். இந்த ஞாயம் பேசிய இவன்தான் உழல் குற்றசாட்டிற்கு ஆளான ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவரான அசாம் பாக்கி என்பவனின் பதவி காலத்தை மூன்று முறை நீட்டித்தான்.
இப்போது, முதலமைச்சரின் பரிந்துரையில் தலைமை நீதிபதி ஏற்றிருப்பவரின் பெயர், வான் ஆமாட் ஃபாரிட் வான். இவரின் நியமனத்தை சிலர் வரவேற்றாலும் இவரின் பின்னணி அவ்வளவு ஏற்புடைதாய் இல்லை.
இவரின் நியமனம் வழக்கத்திற்கு மாறாக, ‘ungodly hours’ என்று சொல்லும் நள்ளிரவு மணி 12.00 அறிவிக்கப்பட்டது. இதில் இருக்கும் சர்ச்சைக்குரிய மிக முக்கியமான ஒரு விஷயம், இவரைவிட அனுபவத்திலும் பதவியிலும் மூத்த உச்ச நீதிமன்ற நிதிபதிகள் 9 பேர், மேல் முறையீட்டு நீதிபதிகள் 24 பேர்களையும் ஓரங்கட்டிவிட்டு இவரைத் தேர்ந்தெடுத்தது?.
ஃபெடரல் கோர்ட்டின் அதிகாரத்துவ இணைதள குறிப்பின்படி 27 மேல்முறையீட்டு நீபதிகளின் seniority வரிசையில் இவர் 25 இடத்தில் உள்ளவர். (அதாவது கடைசியிலிருந்து 3-வது இடம் )
33 நீதிபதிகளையும் முந்திக்கொண்டு (இதில் 9 ஃபெடரல் கோர்ட் நீதிபதிகள் அடக்கம்) இவரை இப்பதவிக்கும் ஆன்வர் ஏன் பரிந்துரை செய்தான்?.
ஃபெடரல் கோர்ட் நீதிபதிகள் வரிசையில் நளினி பத்தமநாதன், நஜ்லான் கசாலி, அசிமா ஓமார், கோலின் லாரன்ஸ் செகுவேரா மற்றும் சைனி மஜ்லான் போன்ற புகழ்பெற்ற நீதிபதிகளும் அடங்குவர்.
சரி, இப்படிப்பட்டவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தப் பதவியைப் பெற இவருக்கு ஏதும் சிறப்பு தகுதி இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இவர் ஒரு முன்னால் அம்னோ அரசியல்வாதி மற்றும் துணை அமைச்சர் என்பது கூடுதல் களங்கம்.
ஒரு ஹைகோர்ட் ஜட்ஜாக இவர் தீர்ப்பளித்த ஒரு வழக்கு கீழே.
‘ஒரு இந்துத் தாயின் மூன்று பிள்ளைகளின் கட்டாய இஸ்லாமிய மதம் மாற்றம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது.’
நவம்பர் 2024-ல் மேல் முறையீட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டவர், 8 மாதங்களில் தலைமை நீதிபதியாக பதிவி உயர்வு பெறுவது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு உயர்வு.
தன்னை விட அனுபவத்திலும், துறைசார் அறிவிலும் சிறந்த சீனியர்கள் பலர் இருக்க தனக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டது அவருக்கு நெருடலாக இருக்காதா?. அச்செயல், நீதிபரிபாலனத்திற்குள் வராதா?.
விரைவிலேயே கீழ்கானும் வழக்குகள் இவரின் கவனத்திற்கு வரக்கூடும்.
- ஆனவர் இப்ராஹிமிற்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கு
- நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல்
- துணைப் பிரதமர் சைட் இப்ராஹிமின் DNNA (Discharge Not Amounting to Acquittal)
- ரோஸ்மா மன்சோரின் DNNA.
இன்ஷா அல்லா



Comments

Popular Posts