முதுமை
Memory Lane – 87
என் தாய்க்கு அந்தக் குறைப்பாடு இல்லையென்றாலும் சிலருக்கு முதுமையின் அடையாளமாக அது நேர்ந்துவிடுவது தவிர்ப்பதற்கில்லை!.
நான், ஒரு காதை வைத்துக்கொண்டே பல தசாப்தங்களை ஒப்பேத்திவிட்டேனே!.
ஓ.. நான், முதுமையின் அடையாளமென்றல்லவா சொன்னேன்?. சரிதான்!. புரிந்தது.
இந்தியாவில் பிறந்து பஹ்ரேய்ன், பிரிட்டன், ஹாங்காங் என்று பயணித்து தற்போது குடும்பத்துடன் சிங்கையில் வசிக்கும் எழுத்தாளர், வனிதா ரமணி ‘The Grand Arcade’ என்ற தலைப்பில் 7 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் ஒரு கதைத் தலைப்பு, ‘Hearing Aid’.
கதை முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது..
‘Raju gradually lost contact with the world of slurs, laments, gossip and praise over a decade.’
இன்னும் ஒரு வரி,
‘He told his relatives that he would never wear a hearing aid because it would only serve as a reminder of something that he had been lost.’
இப்படியாக கதை ராஜுவின் வாழ்க்கையைக் கூறுகிறது. அவரின் மனைவி மாலா. தான் செய்து வந்த வங்கிப் பதிவியினின்று ஓய்வு பெற்றிருந்தாலும், சமயம், ஆன்மீகம், புண்ணிய ஸ்தல யாத்திரையென்று இன்னும் துடிப்புடனே இயங்குகிறாள். கணவனின்மேல் தினமும் கடுமையான விமர்சனங்களை வைக்கிறாள். நாற்பது வருட தாம்பத்தியம், routine-ல் தனது கவர்ச்சியை இழந்து சலிப்பில் எஞ்சி நிற்கிறது. மாலாவிற்கு யாருடனோ தொடர்பு இருப்பதாக ஒரு செய்தி!. ராஜுவின் தங்கை இச்செய்தியை அண்ணனிடம் சொல்கிறாள். அவர், எதைப்பற்றியும் நம்பத் தயாராயில்லை. மாலா அவரின் மனைவி. அவளைக் களங்கம் சொல்ல யாருக்கும் உரிமையில்லை!.
‘ஏதோ ஒரு சந்தர்ப்பம் உறவினர்களை வீட்டில் ஒன்றுகூட வைத்திருக்கிறது. ராஜுவும் மாலாவும் திருமண தம்பதியர் எனும் பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய சந்தர்ப்பங்க்களில் மாலா, தன்னுடன் பேசவோ, தனது பார்வையைச் சந்திக்கவோ விரும்பாவிட்டாலும் ராஜூ எப்போதும் போல் ‘hearing aid’ இல்லாமல் ஊமையாக அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார்.’
கதை முடிகிறது.

Comments
Post a Comment