இலிட் சொசைட்டி

 


கோலாலம்பூர் குசும்பு – 24

இலிட் சொசைட்டியைச் சேர்ந்த ஒரு கப்பல். (couple)! மரணப் படுக்கையில் மனைவி.
அவர்களுக்கிடையே உரையாடல் இப்படி இருந்தது.
மனைவி : டார்லிங், நான் செத்தப் பெறவு நீங்க இன்னொரு கல்யாணம் செஞ்சுக்குவிங்களா?
கணவன் : நிச்சயமா டியர். உனக்குதான் தெரியுமே.. நான் தனிமைய தாங்க மாட்டேன்னு?.
மனைவி : ஆமாமா.. நா பூசையில இருக்குற தனிமையகூட பொறுக்க முடியாம நீங்க அடிக்கிர லூட்டிதான் தெரியுமே.. அதுக்குன்னு வேலக்காரிகூடயா?.. நமக்குன்னு ஒரு சோசியல் ஸ்டேடஸ் இருக்கே, அத பாக்க மாட்டீங்களா?. நீங்க ஒரு புரொபஸர் இல்லியா?
தலைக் குனிந்தபடி கணவன், ‘டியர், நீ தெய்வம்…’ என்று முணுமுணுத்துக்கொண்டான்.
மனைவி : என் தங்கச்சி பாமாவ தெரியுந்தானே?.
கணவன் : அந்த அக்கவுண்டண்ட் தானே!.. ஏந் தெரியாது?. பட், ஷீ ஈஸ் மேரீட் வித் ஹஸ்பண்ட்?.. ஹாவ் இஸ் இட் பாசிப்பள்?..
மனைவி : யூ டூ!.. நீங்க வேலக்காரிகூடன்னா அவ வீட்டு டிரைவர்கூட!.. பிளீஸ், எட்லீஸ்ட் ஹெவ் சம் டிக்னிட்டீ?.. உங்க பிரண்ட் டாக்டர் கிருஸ்ணாவ பாருங்க!.. வாவ், வாட் அ status conscious man!..
கணவன் : 😡😡😡

Comments

Popular Posts