வந்தாப்பலண்ணா..

 


கோலாலம்புர் குசுப்பு – 88

மீ – வாடா எடு புடி. நேத்தே வருவேன்னு நெனச்சன். இன்னிக்கிதான் வரியேடா!..
எ. பு. – அத ஏன்ண்ணா கேக்குறாப்புல?. நா இப்ப நம்ம பாஷையே மறந்துட்டு இருக்குறாப்லண்ணா.
மீ – ஐயய்யோ!.. என்னடா ஆச்சி?.
எ. பு. – ரெண்டு வாரத்துக்கு முந்தி ஊர்லேர்ந்து எங்க அத்த வந்தாப்பலண்ணா..
மீ – சரி. ஊர்ல எந்தப் பக்கம்டா?
ஏ. பு. – அரியலூர், தளவாய் பக்கத்துலேர்ந்து வந்தாப்பலண்ணா. மூனு வாரம் நம்ம வூட்ல இருந்து நம்ம ஊர பாத்துட்டு போறாப்பலன்னு ஐடியா. ஊர்ல அத்தைக்கு காலீலியே தெனமும் கோவிலுக்கு போற பழக்கம் இருக்குமாப்ல. ஒரு நாளு, பக்கத்துலியே கோயில் ஏதும் இருக்குதா தம்பி அத்த கேட்டப்ல. ‘ஓ இருக்குதே அத்த’ன்னு நா சொன்னாப்ல. ‘என்னா கோவிலு தம்பி?.’ன்னு அத்த கேட்டப்ல. ‘முனியாண்டி சாமி கோவிலு’ன்னு சொன்னாப்ல. ‘கிருஷ்ணர் கோவிலு ஏதும் இல்லியாடா’ன்னு கேட்டு அத்த ரொம்ப ஃபீல் பண்ணப்ல. ‘இங்க மாரியம்மன், முனியாண்டிசாமி, முனீஸ்வரன், புள்ளையாரு, ஸ்ரீ ராஜேஸ்வரி, ஆஞ்சநேயரு கோவில்ங்கதான் ரொம்ப இருக்கு அத்த’ன்னு நா வெளக்குனாப்புல. அத்தைக்கு மனசே ஒடிஞ்ஜிசிடாப்ல. நா கிஷ்ணரு படத்த ஒன்ன வாங்கி வெக்க இப்ப தெனமும்‘கேட்டதும் கொடுப்பனே கிஸ்ணா.. கிஸ்ணா..’ன்னு அத்த பாடிட்டு இருக்காப்புல. அன்னிக்கி சனிக்கிழமையும் அதுவுமா அத்தய கூட்டிகிட்டு நாங்க எல்லாரும் வெளிய சாப்புட போனாப்புல. கல்லா பெட்டி செவுத்துல அரபிக் எழுத்த பாத்தவொண்ண, ‘தம்பி, இது என்னா பாய் கடையா’ன்னு அத்த கேட்டாப்புல. ‘ஆமாம் அத்த.. ஏன்?.’ன்னு நா சொன்னாப்புல. சும்மாதான் கேட்டன்னு சொல்லிட்டு, கடசி வரிக்கும் ஒன்னுமே சாப்புடாமியே அத்த எழுந்திரிச்சிடாப்புல.
மீ – ஐயய்யோ!. இப்ப அத்த இங்கதான் இருக்கப்பிலியா இல்ல ஊருக்கு கெளம்பிடாப்பிலியா? அட ச்சீ!. கொஞ்ச நேரத்துல நானே தடுமாறிட்டன். இப்ப அத்த இங்கதான் இருக்காங்களா இல்ல ஊரு பாக்க போயிட்டாங்களாடா?
ஏ. பு. அத்த ரெண்டு வாரம் பல்ல கடிச்சிட்டு இருந்துடாப்லண்ணா. ‘என்னடா ஊரு இது. அக்கம் பத்துல எல்லாமே சடையனும் நாட்டானுமே இருக்காப்புல. அப்படியே பக்கத்துல நம்ம ஆளுங்க இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்க மாட்டாப்ல. நம்ம சனங்களும்கூட பன்டியையும் மாட்டையும் சாப்புடறாப்புல. ஆயிரந்தான் இருந்தாலும் ஒத்தாசைக்கு நம்ம சாதி சனங்ககூட இருக்காப்புல ஆவுமாடா?. இந்த ரெண்டு வாரமே போதும்டாப்பா. உங்க மொத்த ஊரயும் பாத்துட்டாப்லதான் இருக்கு. நா கெளம்பரண்டாப்பான்னு சொல்லி போன ஞாயித்து கிழமதான் ஊருக்கு கம்பி நீட்டீட்டாப்லண்ணா.
மீ – நல்லபடியா ஊருக்கு போய் சேந்துடாப்லதான? ச்சீ.. சேந்துட்டாங்கதானே.
எ. பு. – எல்லாமே நல்லபடியா முடிஞ்ஜிடாப்லதாண்ணா!.


Comments

Popular Posts