ஒன் லவ்…



கோலாலம்பூர் குசும்பு – 11

மீ : வாலா டுபுக்கு.. என்னலா இப்பல்லாம் இந்த பக்கமே காணல?..
டுபுக்கு :அத ஏன்ண்ணா கேக்குறீங்க?.. நா லையன் டான்ஸ் குருப்ல இருக்கறதுதான் உங்களுக்குத் தெருயுமேண்ணா. சீனப் பெரு நாளு அதுவுமா நேத்தெல்லாம் வீடு வீடா ஒரே டான்ஸ்சு புரோக்ரேம் தாண்ணா!.. இடுப்பு கழுன்டுரிச்சி... அதான்!. சரி, அது இருக்கட்டும்ண்ணா. ஊங்க கிட்ட ஒன்னு கேக்கனுமே?..
மீ : ஊங்கிட்ட இந்த அண்ணுக்கு புடிச்சதே இப்பிடி எதியாவுது கேட்டு தெரிஞ்ச்சிகுனும்ன்ற கொணம் தாலா. எவ்ளோதான் விஷயத்த தெரிஞ்சிக்கிட்டாலும் தெரியும்ன்ற மண்ட கனம் துக்குனோண்டுகூட இல்லாம இருக்க பாத்தியா, நீ பெரிய எடத்துக்கு வருவலா.. ம்ம்..கேலு லா செல்லாம்!. என்ன கேக்கனும்?.
டுபுக்கு : வெலண்ட்டைன் டே தான் நேத்தோட முடிஞ்சி போச்சேண்ணா..
மீ : ஆமாலா செல்லம்!.. அதுக்கு இப்ப இன்னாங்குற?..
டுபுக்கு : காலீல நேரடியா காமிச்ச பேட்மிண்டன் கேம பாத்தண்ணா. அம்பாயர் இன்னடான்னா, பாயிண்டு எடுத்துக்கிட்டே இருக்குற பொண்ண பாத்து ஒன் லவ்… டூ லவ்… த்திரீ லவ்…வின்னு கையி லவ்வ சொல்லிக்கிட்டே இருக்குதுண்ணா.. அது எப்பிடிண்ணா முடியும்?..
மீ : 🤦🤦🤦

 

Comments

Popular Posts