தைப்பூச வைப்

 


கோலாலம்புர் குசும்பு – 86

தைப்பூச வைப்
மீ – வாடா எடு புடி. தைப் பூசமெல்லாம் எப்பிடிடா இருந்துச்சி?. முருகனுக்கு மொட்ட போட்டிருக்க போலிருக்கு? ஏதும் வேண்டுதலாடா?.
எ. பு. – அப்படியெல்லாம் ஒன்னுமில்லண்ணா!. முருகனுக்கு முடிய காணிக்க கொடுத்தா நல்லதுன்னு வூட்ல சொல்றாங்கண்ணா. அதான்.
மீ – புரியிலியேடா
எ. பு. – ஆம்பிளிங்களுக்கு அழகே தலமுடி தானேண்ணா!. அதியே இப்படி காணிக்கை கொடுக்கிறதுனால நம்மளோட அகங்காரம், ஆணவம் எல்லாம் அழிஞ்ஜி போயிருமாம்ண்ணே. அது ஒரு பெரிய விஷயம் இல்லியா?.
மீ – பலே!. அப்படின்னா தவண முறையில அகங்காரத்தையும் ஆணவத்தையும் அழிச்சிட்டு வரேன்னு சொல்லு.
எ. பு. – ஆமாண்ணா!. அப்பிடியும் வெசிக்கிலாம். நாமல்லா வெறும் மனுஷங்க தானே!. ஒரேடியா அழிச்சிற முடியுமா என்னா?. அதுக்குதான் வருஷா வருஷம் தவறாம மொட்ட போட்டுட்டு வரோம்ல!. அது இருக்கட்டும். உங்ககிட்ட ரொம்ப நாளாவே ஒன்னு கேக்கனும்ன்னு இருப்பன் ஆனா மறந்து மறந்து போயிருவண்ணா.
மீ – அப்படியா?. அப்படி என்னடா கேக்கனும்னு நெனைக்கிற?.
எ. பு. – நீங்க எப்பிடிண்ணா எப்பியிமே இப்பிடி கூலா, ஈகோ இல்லாம பணிவாவே இருக்கீங்க?.
மீ – அப்படீன்ற!. சரி, நீ வருஷா வருஷம் மொட்ட போடுறது எதுக்குன்னு சொன்ன?
எ. பு. – என்னோட அகங்காரம், ஆணவம் எல்லாம் அழிஞ்ஜி போறதுக்கண்ணா.
மீ – அப்ப ஒருத்தன் ஒரு வயசுக்கு அப்பறம் நிரந்தரமாவே மொட்டையா ஆயிட்டான்னா?.
எ. பு. – ஐயோ.. யெண்ணா!, நீங்க பயங்கர ஆளுண்ணா.
- தவணை முறையில் மொட்டை
- நிர்வானா

Comments

Popular Posts