'வாலிப முறுக்கு..'
Life is funny series -1
இன்று மாலை நண்பர் தயாஜியை சந்தித்துவிட்டு வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு கைப்பேசி அழைப்பு. யாரென்று பார்த்தால், முறுக்கு வியாபாரி. (நாளை போகவிருக்கும் வெளிநாட்டு பிரயாணத்தை முன்னிட்டு துணைவியார் முறுக்கு ஆர்டர் செய்திருந்தார்)
நான் : வணக்கம் மேடம்
நான் : நீங்க எத்தன மணிக்கு கடைய அடப்பீங்க மேடம்?
முறுக்கு மேடம் : 7 மணிக்கு அண்ணெ..
நான் : நோன்பு தொறக்குற நேரமாச்சி. இப்ப அந்த பக்கம் வந்தா 'ஜேம்ல' மாட்டிக்குவோம். நாளைக்கி காலீல எத்தன மணிக்கு கட தொறப்பீங்க?
முறுக்கு மேடம் : காலீல தொறக்க மாட்டோம்ண்ண.. மத்தியானம் ரெண்டு மணிக்குதான் தொறப்போம்.
நான் : சரி, அப்பட்டின்னா நாளைக்கி ரெண்டு மணிக்கே எடுத்துக்கிறோம்.
முறுக்கு மேடம் : சரி. மறந்துற போரீங்கண்ண..
நான் : இல்ல மறக்கமாட்டோம்
முறுக்கு மேடம் : நன்றிண்ண..
இங்க, யாரந்த 'அண்ணன்'?
நான்தான்!
யாரந்த 'அப்பா'?
அதுவும் நான்தான்!.
பாவம், மேடம்!..
தமிழில் என்னோட இந்த 'Attitude'க்கு ஒரு வார்த்த இருக்குது. அது,
'வாலிப முறுக்கு..'

Comments
Post a Comment