தேசிய தினம்

 


'The Star' நாட்டின் முக்கியமான ஆங்கில நாளிதழ்களில் ஒன்று. கீழே இருப்பது இன்றைய இதழின் தலைப்புச் செய்தியும், புகைப்படமும்.
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அரசாங்க பதிவுத் துறையின் கலை, பண்பாட்டுப் பிரிவு நாட்டில் வாழும் பல்லின மக்களின் பாரம்பரிய உடை அலங்காரத்தில் தோன்றி, நாட்டில் நிலவும் இன நல்லினக்கத்தையும், கலாச்சார ஒற்றுமையையும் எடுத்துக் காட்டும் படமிது.
படத்தில், சுடிதார் ஒரு பாரம்பரிய உடையாக ஒருவர் அணிந்திருக்கிறார். அது, யாரை பிரதிபலிக்கும் உடையோ தெரியவில்லை. ஆனால், நாட்டின் மூன்றாவது பெரிய இனமான இந்தியர்களின் பாரம்பரிய உடைக்கோ இங்கு இடமுமில்லை, மரியாதையுமில்லை! 🤦
இந்தக் குறையை இன்னொரு வகையிலும் புரிந்துக்கொள்ளலாம்.
தேசிய பதிவுத் துறை என்பது உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு பிரிவு. ஆக, அரசாங்கத்துறையில் எமது இந்தியர்களுக்கு இருக்கும் வேலை வாய்ப்பின் லட்சணம் இதுதான்.
இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க, மலேசிய இந்திய காங்கிரஸ், IPF, MIPP, MIJP, DMIP, DAP (Indian leaders), PKR (இந்திய தலைவர்கள்) என்று எத்தனை இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் களத்தில் இறங்கிப் போராடி வெற்றி பெற முடியாமல் தமது அரசியல் பதவியையே துச்சமெனத் துறந்து இனத்தின் மானம் காத்து ஒளிர்கின்றனர். இதில் ஒரு கட்சிக்கு 60 ஆண்டுகால பெருமைமிகு வரலாறு வேறு. இந்த லட்சணத்தில் இனத்திற்கு மேலும் சேவை செய்ய முடியாத துன்பத்தால் அக்கட்சி தேசிய முன்னணி கூட்டனியிலிருந்து விலக முடிவு செய்து வருகிறதாம்.
அரசியல் நிலவரத்தைப் பார்த்தால் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது ''Perikatan Nasional' (தேசிய கூட்டணி) ஆகத்தான் இருக்கும்போல் தெரிகிறது. ஓடுங்கள்.. ஓடுங்கள்.. திண்ணை காலியாக இருக்கும்போதே போனால் இடம் கிடைக்கும். திண்ணைக்கும் ஒரு பழமொழி வைத்திருப்பவர்கள் நாம்!. 🤭
அவர்களின் அரசியல் கொள்கை தீவிரவாதமென்றால் நமக்கென்ன? நமது 'பொழப்புக்கு' உத்தரவாதம் இருந்தால் சரிதானே?!. 🤦
இப்போது, நமது இந்தியர்களின் ஜனத்தொகை 6.6%. ஏறக்குறைய 2 மில்லியன். இந்தச் சிறிய எண்ணிக்கைக்கு 1001 அரசியல் கட்சிகள். சரி, இவர்களின் கொள்கை இனத்தின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்றால் ஏன் ஒரே கட்சியின் கீழ் இணையலாகாது? தடுப்பது எது, சுயநலமா? 😡
இலங்கையைப் பாருங்கள். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வலிமிகு பாடம் ஒன்று அங்கு இருக்கிறது. 😥

Comments

Popular Posts