டெங்கி/டெங்குவின் பிடியில்

 



Memory Lane – 42
டெங்கி/டெங்குவின் பிடியில்
பள்ளியில் இருந்து வந்தக் கையோடு ஹிரிதிக்கின் முகம் வாடத் தொடங்கியது. தலைவலி அவனின் சுகவீனத்தை மேலும் உறுதிப்படுத்தியது. மருத்தவரிடம் போனால், இன்னும் ஒரு நாள் கழித்து ரத்தம் எடுத்து பரிசோதிக்கலாம் என்று சொன்னார். அதன்படியே செய்துப் பார்த்தபோது, டெங்கிக் காய்ச்சல் உறுதியானது.
Platelets-கள் குறைய ஆரம்பித்தன. மகள், வழக்கம்போல் அதிகபட்ச விபரீதத்தை நினைத்து கலங்க ஆரம்பித்தாள். நல்ல வேலையாக கணவனோடு நானும் அருகில் இருந்தது. கணவன் 11 வருட பந்தம். தந்தை, 39 வருட பந்தம். தாய் வேறு ஆஸ்திரேலியாவில். தனக்கென்று பிள்ளைகள் பிறக்கும்போதுதான், தன்னை ஈன்ற பெற்றோரின் ஆதரவை அன்பை இன்னும் ஆழமாக உணர்ந்துக்கொள்வார்கள் போல.
பெயர்களுக்குப் பின்னால் மருத்துவ டிகிரியை மட்டுமே போட்டுக்கொள்ள முடியாத பல Instant Doctors cum Dietitians தோன்றி டெங்கியை உடனே குணப்படுத்தும் மருத்துவத்தையும் உணவுமுறையையும் பரிந்துரைக்க ஆரம்பித்தனர். போதாததற்கு ஆஸ்திரேலிய அம்மையாரின் அனுபவ அறிவு வேறு.
பீட் ரூட், இளநீர், தவளை சூப், 100 பிளாஸ், நண்டு சூப்பென்று உடனடித் தீர்வாக பல பரிந்துரைகள். ஆயினும், Platelets குறைவதைத் தடுக்க முடியவில்லை. ஹிரிதிக்கின் உடல்நலத்தில் drastic ஆன மாற்றங்கள் ஏதும் ஏற்படாதவரை கவலைக் கொள்ள தேவையில்லையென்று மருத்துவர் சொன்னாலும் தாய் மனம் கேட்கவேண்டுமே!. தினமும் ரத்தம் எடுத்து Platelets எண்ணிக்கை குறிக்கப்பட்டது.
மருத்துவர்களிடம் டெங்கி பற்றிய ஒரு புரிதல் இருக்கவே செய்கிறது. ஒரு வாரத்திற்கு பிறகே Platelets எண்ணிக்கை மேம்பாடு காணும் என்று அவர்கள் சொன்னாலும், அந்த எட்டாவது நாள் குடித்த நண்டு சூப்பினால்தான் Platelets ஏற்றம் கண்டது என்று சொல்வதற்கு ‘இன்ஸ்டண்ட் டாக்டர்கள்’ பக்கத்திலேயே இருந்தனர்.
பிறகு.. பிறகென்ன, எட்டாவது நாள் உடல் தானாகவே மேம்பாடு காண ஆரம்பிக்கும்போது, எட்டாவது நாள் குடித்த தவளை/நண்டு சூப்பால்தான் உடல் தேறியது என்று சொல்லி கிரேடிட்டை தவளையும்/நண்டும் தட்டிக்கொண்டு போக வேண்டியதுதான்.
நாட்டின் சுகாதாரத்துறையிலிருந்து இன்று மாலை, எங்கள் ஏரியாவை Fumigation செய்ய ஊழியர்கள் வந்தனர். சில வினாடிகளுக்கு வீடு, வாகனங்கள், தோட்டம் எல்லாம் புகை மூட்டத்தில் காணமல் போயின.
இரண்டு வாரங்கள் பள்ளிக்கு போக முடியவில்லை. இந்த வாரத்திலிருந்துதான் பள்ளிக்கு போகிறான். இன்று பள்ளிக்குப் போகும் போது, சூரியன் காட்டிய முகம், அற்புதம்!.
இரண்டு வாரங்களாக அவனுடைய நாக்கு வேறு செத்துப் போனது. அதனால், இன்று வெளியில் அழைத்துக்கொண்டுபோய், ‘Fry fish Indonesian style’ சாப்பிட வைத்து அவனுடைய நாக்கின் ‘sense of taste’-ஐ உறுதிபடுத்திக்கொண்டு வந்தோம்.
- Fumigation in full swing.
- சில வினாடிகளுக்கு காணாமல் போன வாகனங்கள், வீடு, தோட்டம்
- இன்று பள்ளிக்குப் போகும்போது சூரியன் செய்துக்காட்டிய அற்புதம்
- 'Sense of taste-ஐ பரிசோதிக்கப்போன இடத்தில்.









Comments

Popular Posts