எம் ஜி கார்



Memory Lane – 99

1960-களில் எஸ்டேட் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்துக்கொண்டிருந்த காலம். மாதத்திற்கு ஒரு முறை எஸ்டேட்டில் தமிழ்ப் படம் காட்டப்படும். எஸ். எஸ். கொக்கோ, ரஞ்சன், எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கல்யாண குமார் மற்றும் முத்துராமன் போன்றோர் அந்தக் காலத்திய ஹீரோக்கள். அவர்களில் எங்கள் வயது பையன்களிடம் எம். ஜி. ஆருக்கு இருந்த ஆதரவு வேறெந்த நடிகருக்கும் இருந்ததில்லை. சிவாஜிக்கு எங்கள் எஸ்டேட்டிலும் இரண்டாவது இடமே.
இந்த ஆதரவால் சில நண்பர்கள் விரோதிகளாகியிருக்கின்றனர். சிலர், முதுகிற்கு பின்னால் ‘ தோ, எம் ஜி ஆர் வராரு’ என்று கிண்டலும் செய்யப்பட்டனர்.
நண்பர்களுக்கிடையே அடிக்கடி சில விவாதங்கள் ஏற்படும்.
ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் காட்டப்பட்ட மறுநாள், படத்தில் அவர் காட்டிய சாகசங்கள், எம் ஜி ஆரின் சாகசங்களுடன் ஒப்பிடப்பட்டு யார் சிறந்தவர் என்ற விவாதத்திற்குள்ளாகும். அந்த விவாதங்கள் சமயத்தில் விரோதத்தில் போய் முடிந்ததும் உண்டு.
ரஞ்சன், விஜயபுரி வீரன் ஆனந்தன் போன்றோர் எம் ஜி ஆருடன் கத்திச் சண்டைப் போட்டால் யார் ஜெயிப்பார்கள் என்று கேட்டனர்.
“அவிங்கனால எல்லாம் எம் ஜி ஆர் மாரி கத்திச் சண்டையில 8 போட முடியுமா?” என்று கேட்டோம்!. (படம், அரசிளங்குமரி என்று ஞாபகம்)
மற்ற இருவரும் அந்த மாதிரியெல்லாம் சண்டைப் போட்டதில்லை. அதனால், எம் ஜி ஆர்தான் ஜெயித்தார்!.
அதே போல்தான் குதிரைச் சவாரியும்!. S. S. கொக்கோ, ரஞ்சன் எல்லாம் எம் ஜி ஆர் மாதிரியெல்லாம் குதிரை ஓட்ட முடியாது.
இப்படியான போட்டி, ஒரு நாள் ‘காடியில்’ (தமிழ் நாட்டில், ‘வண்டி’) வந்து நின்றது.
“ஒலகத்துலேயே ரொம்ப வேகமா ஓடற காடி எது தெரியுமாடி?.”
“ஜக்குவா..”
“அடப் போடி!. அந்த காடியெல்லாம் ‘எம் ஜி.’ காடி பக்கத்துலகூட வரமுடியாது!..”
(எம். ஜி என்ற இரண்டெழுத்தால் வந்த சிறப்பு அது)
அந்தக் கவர்ச்சி இன்னும்கூட விலகவில்லை!.
மற்றவை இணைப்பில்.

- 'காடி'யின் விலைப்பட்டியல் ஆசான், தேவ் ஆனந்த் பார்வைக்கு. அதில் அவருக்கு ஆர்வம் அதிகம் என்பதால். 

Comments

Popular Posts