கோயம்புத்தூர் டைரி



நான் பல முறை தமிழ் நாடு சென்றிருந்தாலும் ஒரு நாளும் கோயம்புத்தூர் சென்றதில்லை. அந்நகரமோ, தனது ஜவுளி தொழிலுக்காக ‘Manchester of Tamilnadu’ அழைக்கப்பட்டது. நான், ‘Linen’ -னால் நெய்யப்பட்ட ஆடைகளைத் தேடி அணியும் ஆர்வலன். ‘cotton’-ஐ காட்டிலும் ‘linen’ ஆடைகள் மலேசியா போன்ற வெப்ப மண்டல சீதோஷ்ன நிலைக்கு உகந்தவை என்பது என்னுடைய தாழ்மையானக் கருத்து!.

லினன் ஆடைகள் ‘ஆளிச் செடியின்’ நாரிலிருந்து நெய்யப்படும் துணிகளாகும். ஆங்கிலத்தில் அச்செடிக்கு ‘Flex plant’ என்று பெயர். சீனா இந்த ஆடைகளின் மிகப் பெரிய உற்பத்தி நாடு. ஆனால், பெல்ஜியம், ஃபிரன்ஸ், இத்தாலி மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளின் லினென் ஆடைகளுக்கு இருக்கும் கிராக்கி சீனாவிற்கு கிடையாது. அந்த மேற்குலக நாடுகளின் லினென் உடைகள் உலக பிரசித்திப் பெற்றவை. அதனால் விலை உயர்ந்தவையும்கூட. சினிமா பிரபலங்கள் கோடைக் காலங்களில் விரும்பி அணியும் ஆடை!.
மலேசியாவில் ‘Kapten Batik’, ‘British India’ போன்ற கடைகளில் இந்த ஆடைகளை வாங்கலாம். ஆனால், ஒரு நல்ல, அழகிய லினென் சட்டை மலேசிய வெள்ளி 300.00 -லிருந்து 1,000.00 வரையிலும் விற்கப்படுகிறது. ‘Kapten Batik’ -ல் நான் பார்த்த ஒரு லினென் ‘Batik’ சட்டையின் விலை, மலேசிய வெள்ளி 1,800.00 ஆனால், தமிழ் நாட்டிலுள்ள ‘Linen Club’-ல் நமக்குப் பிடித்த லினென் துணியில் ஒரு சட்டையை மலேசிய வெள்ளி 150.00-லிருந்து 200.00 வெள்ளிக்குள் தைத்துக்கொள்ளலாம்.
கோயம்புத்தூர், தமிழ் நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகின்ற பட்சத்தில் அங்கே கொட்டிக் கிடக்கும் லினென் துணிகளையும் ஒரு முறைப் பார்த்துவிடுவதென்ற ஆசைப் பிறந்தது. ஆனால், ஏமாற்றமே எஞ்சியது. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!.
மேலும், அங்கே எனது முகநூல் நண்பர்கள் சுரேஷ் வெங்கடாத்ரி, அரவிந்த் வடசேரி, போகன் சங்கர், சண்முகராஜா போன்றோரும் இருந்தனர். வாய்ப்பு கிடைத்தால் அவர்களையும் சந்திப்பதென்று தீர்மானித்திருந்தேன்.
நண்பர் சண்முகராஜாவின் மூலமாகவே எனது கோயம்புத்தூர் பிரயாணத்தை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது சாத்தியப்படாமலேயே போனது. ஆயினும் அந்த அசௌகரித்திற்கிடையேயும் அவர் என்னைச் சந்திக்கத் தவறவில்லை. சின்ன குப்பண்ணாவில் நல்ல காரத்துடன் அவர் ஆர்டர் செய்திருந்த மட்டன் பரோட்டாவை மறப்பதற்கில்லை!.
அரவிந்த் வடசேரியை இரண்டாவது முறையாகவும் சந்திக்க முடியாமல் போனது. ஒரு சின்ன ‘miscommunication’-ல் சந்திப்பு சாத்தியப்படவில்லை.
எனது கோயம்புத்தூர் பிரயாணம் முதலில் 6 – 8 வரையே!. ஏழாம் தேதி மாலை சுரேஷ்சைச் சந்திக்க அழைத்தபோது 8 மாலை சந்திக்கலாமென்று சொன்னார். நானோ 8 காலையே மதுரைப் புறப்படவிருந்தேன். சந்திப்பை இழக்க விரும்பவில்லை. எனது கோவை aaccommodation-ஐ மேலும் ஓர் இரவிற்கு நீட்டித்தேன். அண்ணப்பூர்ணாவில் சந்தித்துக்கொண்டோம். இரண்டு நண்பர்களுடன் வந்தார். மூவரும் வெண்தாடி வேந்தர்கள்போல் இருந்தனர். நான்தான் சுயத்தை இழந்து தெரிந்தேன்.
சரியாக ஒரு வருடத்திற்குப் பின்னர் அவரை மீண்டும் சந்திக்கிறேன். கடந்த முறை பணியிலிருந்தார். இம்முறை, ஓய்வு பெற்றிருந்தார். ஓய்வின் உற்சாகம், ‘carefreeness’ அவரின் attitude-ல் தெரிந்தது. I felt very comfortable with him. கடந்த ஆண்டு, ‘டை’ அடித்து மறைக்க முயன்ற வயது, இப்போது, ‘salt & pepper’-ல் இளமைப் பூத்துக் கிடந்தது. அது அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. முடி நரைத்தால் என்ன? தோற்றம் தளரவில்லையே!. சுரேஷ், உங்களுக்கு முதுமை வருமா?
அண்ணப்பூர்ணா, வேலன் காப்பி, நடைப் பாதையென்று மூன்று மணி நேரத்திற்கு இலக்கியம், இந்திய மற்றும் மலேசிய அரசியல், சினிமா, எம் ஜி ஆர் என்று ஒரே அரட்டதான். நேரம்தான் போதவில்லை. அடுத்த முறை சனிக்கிழமைகளில் வந்தால் வாராந்திர கூடுகையில் கலந்துக்கொள்ளலாமென்று சொல்லப்பட்டது.
அடுத்த ஆண்டிற்காக காத்திருக்கிறேன்.
கோவை, எனக்கு மிகவும் பிடித்த நகரமாக இருக்கிறது.
- ஒரே சட்டை. இந்தியாவில் RM150.00 மலேசியாவில் RM500.00
- சண்முகராஜாவும் அவரின் நண்பர்களும்
- நண்பர் சுரேஷ் வெங்கடாத்ரியுடன்

- சுப்புராமன், தியாகு, பதிவர், சுரேஷ் 




Comments

Popular Posts