'முகத்திரண்டு புண்'
கோலாலம்பூர் குசும்பு - 46
(உண்மைச் சம்பவம்)
கடந்த சனிக்கிழமை கூஜாவைத் தூக்கிக்கொண்டு மனைவியுடன் செந்தூல் மார்க்கெட் போயிருந்தேன்.
செந்தூல், மனைவியின் பிறந்த ஊர் என்பதால் வாரத்திற்கு இரண்டு முறை 35 Km பயணம் செய்து அங்கு போய் தனது மார்கெட் தேவையைச் செய்துக்கொண்டு வருகிறார். (Sentimental attachment)-ஆம்
மார்க்கெட்டிங் முடிந்து வரும் வழியில் செட்டியார் கோவிலுக்கு எதிரே உள்ள K R Mani என்ற ரெஸ்டாரண்ட்டில் பால் அப்பம் சாப்பிடுவது ritual.
'தமிழில் பேசுவது அவமானமல்ல நமது அடையாளம்' என்று சொல்லும் உணவகம்.
அதனாலோ என்னவோ அங்கே வேலை செய்யும் ஒர் ஆந்திராகார இளைஞன் தெலுங்கு மொழியைத் திக்கித் திக்கியும் தமிழை சரளமாகவும் பேசிக்கொண்டிருந்தார். மலேசியா வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம்.
கடந்த வாரம், அப்படி போன போது மேசை காலியில்லாததால் ஒர் இந்திய அம்மையாருடன் மேசையைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டி வந்தது.
அவருடன் அளவளாவியதில் தெரிந்துக்கொண்ட செய்தி..
-அவரும் செந்தூலைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
-'Garden International' பள்ளியில் ஆசிரியர் பணியில் இருக்கிறார்.
-அருகிலிருக்கும் தேவாலயத்திற்கு Sunday mass-க்கு வந்திருக்கிறார்.
நான், முதல் மாடியிலிருக்கும் கழிவறைக்குப் போக வேண்டி இருந்தது. போனேன்.
நான், திரும்பி வந்தபோது அம்மையார் கிளம்பிப் போயிருந்தார். மனைவியைப் பார்க்க பிரகாசமாய் இருப்பதுபோல் தெரிந்தது. அருகில் அமர்ந்தேன். மனைவி சொன்னார்.
'அந்த லேடி கேக்கறாங்க, நீங்க என்னோட அப்பாவான்னு..' 



Comments
Post a Comment