முட்டி செத்துப் போச்சி
கோலாலம்பூர் குசும்பு – 10
அது, ஏற்கனவே பந்து விளயாட்டுல அடிப்பட்ட முட்டிதான். பீச்ச கால ஆப்பரேஷன் பண்ணுன அனுபவத்தால இந்தக் காலுக்கு ஆப்பரேஷன் வேணான்னு உட்டுட்டன். அப்பேர்ந்து நடக்கறப்ப உடனே ‘turn’ அடிக்க முடியில. முட்டி ‘ஓடிப்’ போயிருது. கொஞ்ச நேரத்துக்கு முட்டிய போட்டு கொஞ்சி, தாஜா பண்ண வேண்டியிருக்கு.
இன்னிக்கிதான் கொஞ்சம் நல்லா இருக்கு. லைட்ட நடைப் பயிற்சிக்கு போயிட்டு வந்து, குளிச்சிட்டு ரிலேக் பண்ணிட்டு இருந்தன்.
எம் மவன் சித்தார்த்தாவ தேடி, அவன் கூட்டாளிங்க ரெண்டு பேரு, வாசு & வர்மண் வந்தாய்ங்க.
“ஆங்கிள், முட்டி என்னா ஆச்சி?.” நான்கூட அவ்ளோ பதறல. அவிங்க அப்படி பதறிப் போய் கேட்டாய்ங்க.
‘A C L’ பிரச்சினைய எனக்கு தெரிஞ்ச பாசையில,
“முட்டி செத்துப் போச்சி புரோ..” ன்னு சொன்னன்.
அவிங்க என்னடான்னா சிரிக்கிறாய்ங்க…
நமக்கு வாய்ச்சவனும் குசும்பு புடிச்சவனா இருக்காய்ங்கலே!.. ம்ம்..

Comments
Post a Comment