ஒரு கப் காப்பியால் வந்த வினை.

 


கோலாலம்புர் குசும்பு – 97
ஒரு கப் காப்பியால் வந்த வினை.
மீ – வாடா எடு புடி. சீக்கிரமாவே ஊட்ல ஒரு கல்யாண சாப்பாடு இருக்கு போல!..
எ. பு – அட போங்கண்ணா நீங்க ஒன்னு. நானே வயிதெரிச்சல்ல இருக்கன்.
மீ – இன்னடா சொல்றா?. எல்லாமே நல்லபடியாதான் போவுதுன்னு சொன்னியேடா?.
எ. பு. – அப்பிடிதாண்ணா போயிட்டு இருந்துச்சி. போன நாயிட்டு கெழம ஜோகூர்லேர்ந்து மாப்ள ஊட்டுக்காரங்க யாரோடய கல்யாணத்துக்கோ கோலாலம்பூர் வந்திருப்பாங்க போல. சரி, இவ்ளோ தூரம் வந்துட்டோம். போற வழீல சும்மானாச்சுக்கும் பொண்ணு வூட்டுக்கும் போயிட்டு போவோம்ன்னு தோனியிருக்கும் போல. திடீர்ன்னு கூப்புட்டு ஊட்டுக்கு வந்துட்டு போறேன்னு சொல்லிட்டாங்க. எப்பிடி வேணான்னு சொல்றது. சரி, வாங்கண்ணு சொல்லிட்டம்.
மீ – சரி அதுல என்னடா பிரச்சின?.
எ. பு. – வந்தவங்க நல்லாதான் பேசிகிட்டு இருந்தாங்க. ஏந் தங்கச்சிதான் மாப்பிள்ளையையும் மாமியாரையும் பாத்ததுல ஒரே பதட்ட மாயிருச்சி. மாமியாரு, ‘ஊங் கையால ஒரு காப்பி கொடு அம்மாடின்னு’ தங்கச்சிகிட்ட கேட்டாங்க. ஏந் தங்கச்சியோ ஒரு ரேடியோ பைத்தியம். நம்ப கலக்கல் காலை பாய்ஸ் வேற ‘வூட்டுக்கு திடீர்ன்னு விருந்தாடி வந்துட்டாங்களா? கவல வேணா!. இருக்கறதே இருக்கு!. ‘சட்’டுனு கலக்கி, ‘பட்’டுனு பறிமாருங்கன்னு 6-லேர்ந்து 10-வரிக்கும் உடாம கூவிக்கிட்டே இருக்காங்களேன்னு ‘சட்’டுனு கலக்கி ‘பட்’டுனு பறிமாரிரிச்சு. ஆனா, ஏந் தங்கச்சி தெரியில அது, மாமியாரு அதுக்கு வெச்ச ஒரு டெஸ்ட்டுன்னு. இப்ப அவுங்க என்னடான்னா, ‘ஒரு கப் காப்பி கலக்க தெரியில, இத வெச்சிக்கிட்டு நாங்க என்னாத்த மாரடிக்கிறது?’ ன்னு கேக்கறாங்கண்ணா?.
மீ – ஊட்டுக்கு வந்தாங்க… டெஸ்ட் வெச்சாங்க… ரிசால்ட தெரிஞ்சிக்கிட்டாங்க… அட, இதுவும் ஒரு 3 IN 1 தாண்டா!.

Comments

Popular Posts