‘தெய்வத் துளி’
Memory Lane – 100
அதற்காக,
‘தெய்வத் துளி’ என்ற சொல், அதுவரை நான் கேள்விப்பட்டிராத ஒன்று!. நிர்க்கதியான ஒரு தருணத்தில் தேவையுணர்ந்து கேளாமலேயே நான் செய்த ஒரு உபகாரத்திற்கு (சில லட்சங்கள்) பன்முகத் திறன் கொண்ட அவர், நா தழதழக்க சொன்ன வார்த்தை, ‘நீங்கள் ஒரு தெய்வத் துளி’.
சொன்னதெல்லாம் அதற்குள் மறந்து போகுமா?. நான்கு வருடங்கள்தானே ஆயின. எல்லாம் மறந்துவிடுமா?.
காலம், காயங்களை மற்றுமா ஆற்றுகின்றன?.
நல்லார் ஒருவருக்கு செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே-அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
அவ்வை அன்றே சொல்லிச் சென்றாளே!.
அன்னாரின் மரியதைக் கருதி என் மனைவியிடம்கூட ஒரு வார்த்தை சொன்னதில்லையே?.
பிரதியுபகாரம் பார்க்காமல் செய்த உதவிதான்.
ஆயினும், மனிதாபிமானம் பொய்த்துப் போனால் நாளைக்கான நம்பிக்கையை எங்கே தேடுவது?.
போகட்டும்!.
முகநூளில், இந்தச் சாமானியனுக்குதான் எத்தனை அருமையான நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்.
நீண்ட பணிச்சுமைகிடையேயும் உங்களின் அன்பை எழுத்துரு வாழ்த்தாகவும், இமோஜியாகவும் சொல்லி என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திய உங்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்!

Comments
Post a Comment