‘உலகின் மிகவும் ஏழ்மையான ஜனாதிபதி.’



 Memory Lane – 103

‘உலகின் மிகவும் ஏழ்மையான ஜனாதிபதி.’
José "Pepe" Mujica.
உருகுவே நாட்டின் 40-வது ஜனாதிபதி.
2010-லிருந்து 2015-வரை ஆட்சி செய்தவர். நாட்டின் ஜனாதிபதியாக இருந்த காலம் தோறும் தனது 90% சதவிகித சம்பளத்தை குறைந்த வருமானம் பெரும் தனிநபர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் தானமாகக் கொடுத்து உதவினார். அதனாலேயே, ‘உலகின் மிகவும் ஏழையான ஜனாதிபதி.’ என்று உருகுவே மக்களால் நன்றியுடன் நினைக்கப்பட்டார்.
ஓய்வு நேரங்களில் விவசாயம் செய்தபடி, காதல் மனைவியும் முன்னாள் களப்போராளியுமான Lucia Topolansky மற்றும் மூன்று கால் நாயுடன் தனது பண்னை வீட்டில் மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார்.
இன்று, தனது 89-வது வயதில் அவர் மரணமுற்றார்.
1960-களில் தோழர் சே குவேரா மற்றும் தோழர் பிடல் காஸ்ட்ரோ தலைமையேற்று வெற்றிகண்ட கியுபா புரட்சியால் கவரப்பட்டு MLN-Tupamaros என்ற இடதுசாரி இயக்கத்துடன் தன்னை இணத்துக்கொள்கிறார்.
1969-ல் தலைநகர் Montevideo,-விற்கு அருகில் இருந்த Pando, என்ற நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்ற 6 சிறு சிறு குழுக்கள் இயக்கத்தால் நியமிக்கப்படுகிறது.. அதில், ஒரு குழுவின் தலைவர், "Pepe" Mujica. அவரின் குழுவிற்கு இடப்பட்ட பணி, தொலைப்பேசி பரிமாற்றச் சேவையைக் கைப்பற்றுவது. நியமிக்கப்பட்ட ஆறு குழிக்களில் இவரின் குழு மட்டுமே காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கிறது.
1970-ல் ஒரு மதுபானக் கடையில் இரண்டு போலீஸ்காரர்களால் 6 முறை சுடப்பட்ட "Pepe" Mujica, மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பணியிலிருந்த மருத்துவரால் காப்பாற்றப்படுகிறார்.
செப்டம்பர் 1971-ல் Punta Carretas சிறைக்குள்,அடைக்கப்பட்டிருந்த 100 கைதிகள் ஒரு சுரங்கப்பாதையைத் தோண்டி வெளியாகி தப்பித்த இடம், சிறைக்கு அருகிலிருந்த வீடொன்றின் வரவேற்பு அறை!. அந்த 100 கைதிகளில் Mujica-வும் ஒருவர்.
ஆட்சியாளர்களால் 4 முறை கைது செய்யப்பட்ட, Mujica, 13 வருடங்கள் சிறை வாசம் செய்ய நேருகிறது. ஒரு முறை, குதிரைகளுக்கு தண்ணீர் வைக்கும் காலி தொட்டி ஒன்றில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்ட சம்பவமும் உண்டு.
1985-ல் நாடு ஜனநாயக ஆட்சிக்கு திரும்பியதையொட்டி, அரசியல் மற்றும் ராணுவ கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். Mujica விடுதலையாகிறார்.
1994 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் கிடைத்த தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து 2010-ல் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.
"Pepe" Mujica-வின் ஆட்சிக் காலத்தில் பல முற்போக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. decriminalization of abortion, the legalization of marijuana consumption and the legalization of same-sex marriage போன்றவை அதில் குறிப்பிடத் தக்கவே.
மேலும்,நாட்டின் தொழிலாளர் இயக்கங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்பட்டது.
இன்றைய நிலவரப்படி அடிப்படை சம்பளம்
உருகுவே - Peso 23,604/USD543 per month
மலேசியா - Ringgit 1,7000/USD 383 per month
2012-ல் AFT நேர்காணல் ஒன்றில் அவர் சொன்னது.
“I’m living a life of austerity. But, I’m not poor. I need little to live.”
‘HASTA SIEMPRE, VIEJO QUERIDO’
(Until forever, old friend)
A banner outside party headquarters.
- "Pepe" Mujica
- கலகக்கார காதலர்கள்
- I need little to live



Comments

Popular Posts