என் மனைவி மற்றும் எனது கருவிழிகள் (IRIS PHOTOGRAPHY)
என் மனைவி மற்றும் எனது கருவிழிகள் (IRIS PHOTOGRAPHY)
கோலாலம்புர் குசும்பு – 85
மனைவி எனும் காதலி.
இது ஒரு கணினி யுகம். காலத்திற்கேற்ப மாறவிட்டால் காலாவதியாகி விடுவேன். எனவே, இன்னும் என்னால் நாதா, சுவாமி, பிரபு, அத்தான் என்றெல்லாம் அழைக்க முடியாது. எவ்வளவுக்கெவ்வளவு மரியாதைக் குறைச்சலுடன் காதலைச் சொல்ல முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு நானும் ஒரு ஜென் அல்பா!
கணவன் எனும் காதலன்.
நான் ஒர் எழுத்தாளனும் அல்லவா!. சாதாரணமாகவெல்லாம் காதலைச் சொன்னால் எனக்கென்ன மரியாதை?.
உன்/என் கண்ணின் பாவையன்றோ நான்/நீ. 
எழுத்தாளன் என்றா சொன்னேன்?. எழுத்து என்பது எழுதப்படுவதன்று, உணர்த்தப்படுவது என்று புதியதோர் விதி இருக்கிறதே!. தோ, உணர்த்திவிட்டேன்!. மற்றவை உங்களின் கற்பனைக்கு!. 


காமம் தூண்டிவிட்ட நெருப்பு,
காதல்!. 
காதலர் தின வாழ்த்துகள். 
Happy Valentine day. 
- படத்தில் காணப்படுவது எங்களின் கருவிழிகள். Zoom செய்தால் மேலும் சில விபரங்கள் கிடைக்கும்.(Iris Photography) கருவிழிகள் இரண்டிற்கும் இடையே காணப்படும் அதிர்வலைகளுக்குப் பெயர் 'Force of Attraction'.
- மலர்கள் இல்லாத ஒரு காதலா? 

Comments
Post a Comment