Baaad Boys
Life is funny series – 2
எனது மனைவியின் தம்பி மகனுக்குத் திருமணம். காலையில் திருமணம் முடிந்திருந்தது. மாலையில், ஹால் ஒன்றில் வரவேற்புடன்கூடிய விருந்துபசரிப்பு!. உறவினர்கள், வழக்கம்போல் ‘மெதுவாதான் போவேமே!.. என்ன அவசரம்?..’ என்ற போக்கில் அவரவர்களுக்கு உகந்த நேரத்தில் வந்துக்கொண்டிருந்தனர். மனைவி, அவர்கள் வீட்டு கல்யாணம் என்பதால் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டதும் இல்லாமல் என்னையும் அவசரப்படுத்தி தொலைத்துவிட்டார்.
ஹாலில் ‘தேமே’ என்று உட்கார்ந்திருக்க முடியாமல் ஹாலுக்கு வெளியே வந்து, வாசலில் நின்று, வருவோர் போவோரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு நேர் எதிரே, பத்திற்கும் குறையாத எண்ணிக்கையில் இளம் ஆடவரும் யுவதிகளும் அட்டகாசமாய்ப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். யுவதிகளில் சிலர், என் கண்களுக்கு லட்சணமாகத் தெரிந்தனர். அப்போது, ஜோக் ஒன்றிற்கு சிரித்துக்கொண்டே அந்தக் கும்பலிருந்து ஒர் ஆடவர் சற்றே விலகி என்னருகில் வந்து நின்றார், ஏதோ ஒரு ‘Adult Joke’ போல! கும்பலில் இருந்த எல்லோரும் ஒரு கணம் பேசுவதை நிறுத்திவிட்டு அவனையே பார்த்துக்கொண்டு நின்றனர்.
அவர், அந்தக் கும்பலைக் காட்டி, ஒரு ஜோக்கைப் போல் என்னிடம் சொன்னார்.
“ஆங்கிள், அவுங்கெல்லாம் ரொம்ப Baaad boys அங்கிள்..” என்று நீட்டி முழங்கினார்.
உடனே, நான் கேட்டேன்.
“நானே ஒரு Baaad boy!. என்னிய விடயா?..”
உடனே, அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் வெடித்துச் சிரித்தனர்.
மறுநாள், மாப்பிள்ளை வீட்டு விருந்திலும்கூட அவர்கள் அந்த சம்பவத்தையே பேசிச் சிரித்துக்கொண்டனர்.

Comments
Post a Comment