'baaa..'
As I’m wandering in Australia – 20
Life is funny series – 3 (English version)
As I’m wandering in Australia – 20
துரித உணவு, இங்கே உத்தியோகத்தில் இருப்பவர்களின் தேசிய உணவு!. அன்று, அப்படி ஒரு உணவை வாங்க வேண்டி ‘Hungry Jack’ சென்றிருந்தோம். அங்கு விற்கப்பட்ட ‘Grill Master Cowboy Angus’-சிற்கு நான் அடிமை.
வாகன வரிசையில் காத்துக்கொண்டிருந்தபோது, பேச்சு உணவு ஒவ்வாமையில் (allergic) போய் நின்றது.
மகள், தனக்கு ஒவ்வாத உணவைப்பற்றி சொல்லி வைத்தாள். எனக்கு அப்படிப்பட்ட ஒவ்வாமை ஏதும் இருக்கவில்லை! பல முறை மலேசியாவிலும், ஒரு முறை சென்னை அமராவதியிலும் ஆட்டு மூளை சாப்பிட்டிருந்ததைப் பற்றி உமிழ்நீர் சொட்ட சொன்னேன்.
மகள், வாயில் ஊறிய உமிழ்நீரை விழுங்கிக்கொள்வது தெரிந்தது. ஆயினும், அவள் முன்பின் சாப்பிட்டிராத உணவு. ஆட்டு மூளை வேறு!. ஏதும் ஒவ்வாமை இருக்குமோ என்ற கலக்கம் அவளுக்கு!.
ஆட்டு மூளை ஒவ்வாமையை மிகவும் எளிதாகவே கண்டுக்கொள்ளலாமென்று நான் சொன்னேன்.
மகள், ஆர்வத்துடன் மிகவும் ‘Innocent’-ஆக,
“எப்படி?..” என்று கேட்டாள்.
நான் சொன்னேன்.
“காலீல எழுந்துரிச்சி உங்க அம்மாவ கூப்புடறப்ப நீ, ‘மே..’ன்னு கத்துனாக்கா ஆட்டு மூள உனக்கு ‘allergic’-ன்னு அர்த்தம்..”
அவ்வளவுதான்!. எங்களின் சிரிப்பு அடங்க அன்றைய இரவு போதாததோடு, ஆட்டு மூளை என்றாலே அந்த ‘allergic’ விஷயத்தை நினைக்காமல் இருக்க முடியாது என்றாகிவிட்டது.

Comments
Post a Comment