கோலாம்பூர் குசும்பு - 118
ரொம்ப நாட்களாகவே என்னிடம் ஏதோ கேட்க விரும்பி, கேட்காமலேயே தயங்கிக்கொண்டிருந்த அருப்புக்கோட்டை பக்கமிருந்து வந்திருந்த வெயிட்டர் இனியும் பொறுக்க முடியாது என்பதுபோல் இன்று கேட்டார்.
"சார், அன்னாடிக்கும் தப்பாம காலீல இங்க பசியாற வர்றாப்பிலியே, என்ன ' job' சார் பாக்கறாப்ல..?."
நான் கேட்டேன்.
"இவ்ளோ நாளா நா மஃடீல வந்தப்பல்லாம் கேக்காம, இன்னிக்கி யூனிஃபார்ம்ல வந்திருக்குறப்ப பாத்து கேக்குறீங்களேப்பு?."
கைக்கு புரியவில்லை. அவருக்கு புரியும் பாஷையில் சொன்னேன்.
"நா, மசலா தர்பாருக்கு வேலை செய்யிற 'ரகசிய போலீஸ்.' மானேஜர் ஒம்போது மணிக்கு மேலதான வருவாரு. அது வரிக்கும் எல்லாரும் ஒழுங்கா வேல செய்யிறாங்களான்னு வேவு பாக்கற வேலப்பு."
"அதான பாத்தன். எனக்கு அப்பியே ஒரு சந்தேகந்தான். சரி சார். எனக்கு உள்ளார ரொம்ப வேல இருக்குறாப்ல.." என்று கை உடனே 'ஜூட்'.
- மஃடியில் நான்
- இன்று எனது யூனிஃபார்ம்மில்
- ஒரு வாய் பசும்பால் புரூ காப்பியை அருந்தும் சுகானுபவத்தில்!.

Comments
Post a Comment